இந்தியாவில் ஜூன் 18ல் மீண்டும் கால்பதிக்கும் ‘பப்ஜி’ – கேம் பிரியர்கள் உற்சாகம்!

0
இந்தியாவில் ஜூன் 18ல் மீண்டும் கால்பதிக்கும் 'பப்ஜி' - கேம் பிரியர்கள் உற்சாகம்!
இந்தியாவில் ஜூன் 18ல் மீண்டும் கால்பதிக்கும் 'பப்ஜி' - கேம் பிரியர்கள் உற்சாகம்!
இந்தியாவில் ஜூன் 18ல் மீண்டும் கால்பதிக்கும் ‘பப்ஜி’ – கேம் பிரியர்கள் உற்சாகம்!

இந்திய பதிப்பிற்கான பேட்டில் கிரவுண்ட் என்னும் பப்ஜி கேம் வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி வெளியாகவுள்ளதாக கிராஃப்டன் நிறுவனம் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த தகவல் கேம் பிரியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டில் கிரவுண்ட் மொபைல்:

நாட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்த கேம் என்றால் அது பப்ஜி. சீன நாட்டு செயலியான பப்ஜி இந்திய நட்டு மக்கள் மத்தியில் அதிக அளவிலான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா நோய்பரவல் காலத்தில், எல்லைப் பிரச்சனையின் விளைவாக நாட்டின் இறையாண்மையை காக்கும் நோக்கில் இந்திய அரசு சீன நாட்டு செயலிகள் அனைத்திற்கும் தடை விதித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பப்ஜி கேம் இயங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் கேம் பிரியர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர்.

2021 ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தே வேலை – பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு!

இதையடுத்து இளைஞர்கள் உற்சாகமடையும் வகையில் ஓர் அறிவிப்பு வெளியானது. அதன்படி பப்ஜி கேம் இந்திய பதிப்பாக மாற்றப்பட்டு பேட்டில் கிரவுண்ட் மொபைல் என்ற பெயரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் கேம் பிரியர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்த கேமை கிராஃப்டன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது இந்த கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் தொடங்கி மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

TN Job “FB  Group” Join Now

பேட்டில் கிரவுண்ட் மொபைல் எப்போது வெளியாகும் என்று அனைவரும் தொடர்ந்து எதிர்பார்த்து வருகின்றனர். இதனை தெளிப்படுத்துவதற்கு நிறுவனம் அவ்வப்போது சில டிப்ஸ்களை வெளியிட்டு வருகிறது. தற் போது இதுகுறித்து தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ஓர் டீசரை வெளியிட்டுள்ளது. அதில் வரைபட கோள்கள் x மற்றும் y ஆக்சிசை குறித்து அதன் கூட்டு தொகையில் மொத்தம் 18 வரும் வகையில் இருந்தது. இதை அடுத்து பேட்டில் கிரவுண்ட் மொபைல் ஜூன் 18ம் தேதி வெளியாகும் என்று அனைவரும் உறுதிபடுத்தியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!