இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை – மகிழ்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்!

0
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை - மகிழ்ச்சியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தினர்!
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை - மகிழ்ச்சியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தினர்!
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை – மகிழ்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்!

இயற்கை முறையில் முல்லையால் குழந்தை பெற்றெடுக்க முடியாது என்பதால் முல்லை செயற்கை முறையில் கருவுருகிறார். அதுவும் ஒன்றிற்கு இரட்டை குழந்தையாக பெற்றெடுத்து கதிரின் கையில் கொடுக்கிறார். இதனை பார்த்த மொத்த குடும்பமும் மகிழ்ச்சியடைகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் அன்றாடம் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் காட்சிகளை மக்களுக்கு படம் போட்டு காட்டி கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பலரும் விஜய் தொலைக்காட்சி சீரியல்களை தான் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். அதிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கூட்டு குடும்ப வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை முல்லை அறிந்து கொள்கிறாள். குடும்பத்தில் உள்ள அனைவரும் குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவதை பார்த்து முல்லை மிகவும் ஏக்கமடைகிறார்.

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – கோதையிடம் நியாயம் கேட்கும் பாட்டி!

ஒரு குழந்தையை பெற்றுக்கொடுக்க முடியாத நான் எதற்கு இந்த வீட்டில் இருக்க வேண்டும் என நினைத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். இல்லாத ஒன்றிற்காக உன்னை என்னால் இழக்க முடியாது என கூறி கதிர் முல்லையை சமாதானப்படுத்துகிறார். வீட்டிற்கு வர மனசு இல்லாமல் கதிர் கூறிய வார்த்தைக்காக மட்டும் வீட்டிற்கு வர சம்மதிக்கிறார். ஏதோ கொலை குற்றம் செய்தது போல குடும்பத்தினர்கள் யார் முகத்தையும் பார்க்க முடியாமல் தலைகுனிகிறார்.

மருத்துவர் இயற்கை முறையில் மட்டுமே குழந்தை பிறக்க சாத்தியமில்லை என கூறினார். இதனால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அனைத்து சிகிச்சைகளையும் எடுத்து கொள்கின்றனர். செயற்கை முறையில் முல்லை கர்ப்பமாக போகிறார். அடிக்கடி கதிரிடம் எனக்கு இரட்டை குழந்தை வேண்டும் என கூறுவார். பெரும்பாலும் செயற்கை முறையில் குழந்தை பிறந்தால் இரட்டை குழந்தையாகவே இருக்கும். எனவே கதிரும் முல்லையும் ஆசைப்பட்டது போலவே இரட்டை குழந்தைகளை பெறவுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here