இரவு வெளியே சென்ற கண்ணன் ஐஸ்வர்யா, முல்லையை நினைத்து சந்தோசப்படும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

0
இரவு வெளியே சென்ற கண்ணன் ஐஸ்வர்யா, முல்லையை நினைத்து சந்தோசப்படும் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
இரவு வெளியே சென்ற கண்ணன் ஐஸ்வர்யா, முல்லையை நினைத்து சந்தோசப்படும் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
இரவு வெளியே சென்ற கண்ணன் ஐஸ்வர்யா, முல்லையை நினைத்து சந்தோசப்படும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி முல்லை கர்ப்பமானதாக நினைக்க ஆனால் தனம் அப்படியெல்லாம் இல்லை என சொல்கிறார். பின் கண்ணனும், ஐஸ்வர்யாவும் இரவு வெளியே சுற்றி பார்க்க செல்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லைக்கு டிரீட்மென்ட் எல்லாம் முடிந்து நல்ல செய்தி என தனம் சொன்னதால் மூர்த்தி முல்லை கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறார். ஆனால் தனம் முல்லை இன்னும் கர்ப்பமாக இல்லை ஆனால் கரு நல்லபடியாக இருப்பதாக சொல்கின்றனர். அப்போது தனம் நமக்கு குழந்தை இல்லாமல் இருக்கும் போது நிறைய பேர் அப்படி சொல்வார்கள் எனக்கு அதிர்ச்சியாக இருக்கும் எப்படி இவ்வளவு பணம் செலவு செய்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் புரிகிறது குழந்தை எவ்வளவு முக்கியம் என என்று தனம் சொல்கிறார்

விஜய் டிவி “பாவம் கணேசன்” சீரியலில் இருந்து விலகிய நடிகை விஷாலினி – ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

குழந்தையை நாம் வேண்டாம் என இருந்தோமே என மூர்த்தி வருத்தப்படுகிறார். மறுபக்கம் கண்ணன் ஐஸ்வர்யா சந்தோசமாக இருக்க அப்போது கண்ணன் ஐஸ்வர்யா புகழ்ந்து பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். அப்போது ஐஸ்வர்யா நமக்கு திருமணம் முடிந்து எங்கேயும் வெளியே போகவில்லை என சொல்ல அப்போது கண்ணன் இப்போ போவோமா என கேட்கிறார். இப்போ எப்படி போவது என ஐஸ்வர்யா கேட்க கதிர் அண்ணன் எப்படி வெளியே போகிறார் அது போல நாமளும் போவோம் என சொல்கிறார். இருவரும் மூர்த்தி கண்ணில் படாமல் வர அப்போது மூர்த்தி நேராக வருகிறார்.

கண்ணன் நேராக மூர்த்தி மீது இடித்துவிட எங்கே போறீங்க என மூர்த்தி கேட்கிறார். சும்மா பாத்ரூம் போக ஐஸ்வர்யாவிற்கு துணைக்கு போவதாக சொல்ல பின் கண்ணனை பல்ப் மாட்ட மூர்த்தி காத்திருக்க சொல்கிறார். பல்ப் மாட்டியதும் மூர்த்தி கிளம்ப கண்ணனும் ஐஸ்வர்யாவும் வெளியே வருகின்றனர். அப்போது கண்ணன் வண்டியில் உட்கார ஐஸ்வர்யாவை பின்னால் உட்கார்ந்து நன்றாக பிடித்துக் கொள்ள சொல்கிறார். பின் போனை கொடுத்து பாட்டு போட்டுக் கொண்டே வர சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

பின் இருவரும் ஹோட்டல் ஒன்றிற்கு செல்கின்றனர். அங்கே புரோட்டா ஆர்டர் செய்து சாப்பிட ஐஸ்வர்யா நீண்ட நாட்களுக்கு பின் மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் நன்றாக சாப்பிட்டுவிட பின் ஐஸ்வர்யா உன்னிடம் காசு இருக்கிறதா என கேட்கிறார். கண்ணன் இருப்பதாக சொல்லி பாக்கெட்டில் பார்க்க ஆனால் அங்கே காசு இல்லாமல் இருக்கிறது. அதனால் கண்ணன் பதட்டம் அடைய இங்கே மாவு ஆட்ட கூட வழி இல்லையே என ஐஸ்வர்யா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here