புது வீட்டில் குடியேறிய கதிர், முல்லை – ஆதரவு தரும் தனம்! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் திருப்பம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை டிரீட்மென்டிற்காக பணம் வாங்கியதால் குடும்பத்தில் பெரிய பிரச்சனை வருகிறது. அதனால் கதிர் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் பெரிய பிரச்சனை வந்துள்ளது. முல்லை டிரீட்மென்டிற்கு பணம் இல்லாமல் கடன் வாங்கி டிரீட்மென்ட் பார்க்கின்றனர். அதனால் கடன் கொடுத்தவர் பணம் கேட்டு வர அப்போது மீனாவிடம் பணம் வாங்கி ஜீவா கொடுக்கிறார். அதனால் மீனாவின் அப்பா சண்டை போட முல்லை அம்மா தனம் அம்மா என அனைவரும் சண்டை போடுகின்றனர்.
10 நாட்களில் 3 கிலோ உடல் எடையை குறைத்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – வைரலாகும் வீடியோ!
மீனாவின் அப்பாவின் சட்டையை பிடித்து ஜீவா சண்டை போட்டாலும் மீனாவின் அப்பா விடவில்லை. அதனால் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் முல்லை அம்மா தனத்தை குறை சொல்ல தனம் இந்த குடும்பத்திற்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் தனத்தின் அம்மா சொல்கிறார். அதெல்லாம் நடிப்பு என மீனா அப்பா சொல்ல மூர்த்திக்கும் கோவம் வருகிறது, அவர் நான் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுகிறேன் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால் பதிலுக்கு கதிர் நான் வீட்டை விட்டு செல்கிறேன் என சொல்லி கிளம்புகிறார். எல்லாரும் தடுத்தும் கூட கதிர் கேட்கவில்லை. முல்லையை அழைத்துக் கொண்டு அவர் வெளியே சென்று விடுகிறார். இந்நிலையில் கதிர் தனியாக இருக்க தனம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க போகிறார். ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்போது பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் குடும்பத்தில் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.