நெஞ்சு வலியால் பரிதாபமாக உயிரிழக்கும் மூர்த்தி பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
நெஞ்சு வலியால் பரிதாபமாக உயிரிழக்கும் மூர்த்தி பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
நெஞ்சு வலியால் பரிதாபமாக உயிரிழக்கும் மூர்த்தி பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
நெஞ்சு வலியால் பரிதாபமாக உயிரிழக்கும் மூர்த்தி பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

கதிரும் முல்லையும் வீட்டை விட்டு பிரிந்து சென்ற உடனேயே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்ததை அறிந்து கதிரும் முல்லையும் மருத்துவமனைக்கு சென்று பார்க்கும் போது மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தபடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூர்த்தி குணமாகி வீடு திரும்புவாரா எனவும், கதிரும் முல்லையும் மீண்டும் குடும்பத்தினருடன் இணைவார்களா எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லையின் சிகிச்சைக்காக குடும்பத்தினர்கள் ரூ 5 லட்சம் வரைக்கும் செலவு செய்ததை தற்போது வரைக்கும் சொல்லி காட்டி சண்டை போட்டுக் கொண்டே இருந்ததால் கடுப்பான கதிர் இதற்கு மேலும் இந்த வீட்டில் இருக்க முடியாது என கூறி முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

மறுபடியும் ராஜேஷுடன் சேர்ந்து வாழ நினைக்கும் ராதிகா – நடுத்தெருவில் நிற்கும் கோபி! ப்ரோமோ ரிலீஸ்!

கதிரிடம் குடும்பத்தினர்கள் அனைவரும் கெஞ்சியும் கதிரும் முல்லையும் மனசு மாறுவதாக இல்லை. இந்த ஐந்து லட்ச ரூபாய் கடனை வேறு எந்த கடையிலாவது வேலை பார்த்து கண்டிப்பாக அடைத்துவிடுவேன் என சொல்லி விட்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார். கதிர் வீட்டை விட்டு கிளம்பும் போது நீ இந்த வீட்டை விட்டு சென்று விட்டால் மறுபடியும் வீட்டிற்குள் வரவே முடியாது என மூர்த்தி கூறுகிறார். ஆனாலும் மூர்த்தியின் பேச்சை கதிர் சற்று காதில் வாங்காமல் முல்லையை மட்டும் அழைத்து கொண்டு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார்.

Exams Daily Mobile App Download

மூர்த்தி வீட்டை விட்டு சென்ற உடனேயே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்துவிடுகிறது. குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மூர்த்தியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்த விஷயம் அறிந்ததுமே முல்லையும் கதிரும் மூர்த்தியை பார்க்க மருத்துவமனைக்கு செல்கின்றனர். எப்படியும் மூர்த்தி குணமாகிவிடுவார். முல்லையும் கதிரும் பழையபடி குடும்பத்தினருடன் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த சமயத்தில் மூர்த்தி சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுவது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது. மூர்த்தியின் இறப்பிற்கு கதிரும் முல்லையும் தான் காரணம் என சண்டை போட்டு குடும்பமே இரண்டாகப் பிரிய போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here