திருமண கோலத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா, சரவண விக்ரம் – ரசிகர்கள் ஷாக்!

0
திருமண கோலத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' விஜே தீபிகா, சரவண விக்ரம் - ரசிகர்கள் ஷாக்!
திருமண கோலத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' விஜே தீபிகா, சரவண விக்ரம் - ரசிகர்கள் ஷாக்!
திருமண கோலத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா, சரவண விக்ரம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே தீபிகா. அவர் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் உடன் இணைந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

விஜே தீபிகா:

தமிழ் சின்னத்திரையில் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு பலர் விசிறிகளாக இருக்கின்றனர். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற டாப் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் விஜே தீபிகா. நடிப்பில் முதல் வாய்ப்பாக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தில் முழு பங்களிப்பை கொடுத்து கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்.

பாக்கியா பிரச்சனையை கண்டு கொள்ளாத கோபி, கோவப்படும் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அவருடைய நிஜ பெயரை மறந்து மக்கள் மனதில் ஐஸ்வர்யாவாக இருந்தார். கண்ணனுடன் காதல் காட்சிகளில் அவர் நடித்ததன் மூலமாக கண்ணன் ஐஸ்வர்யா ஜோடிக்கும் தனி ரசிகர்கள் வந்தனர். ஆனால் அவர் முகப்பரு பிரச்சனை காரணமாக சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சாய்காயத்ரி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜே தீபிகா தன்னுடைய முகப்பரு பிரச்சனையை சரி செய்து சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

கலர்ஸ் தமிழ் டிவியில் சஞ்சனா கதாபாத்திரத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அது மட்டுமில்லாமல் அவர் தொடர்ந்து சீரியலில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் விஜே தீபிகா அவருடன் கண்ணனாக நடித்த சரவண விக்ரம் உடன் நட்பாக பழகி வருகிறார். இருவரும் காதலிக்கின்றனரா என பலர் சந்தேகப்பட்டாலும் அதெல்லாம் இல்லை என இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் மணக்கோலத்தில் இருவரும் சேர்ந்து ஜோடியாக போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!