“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மகா நடிகை கயலின் குறும்புத்தனமான வீடியோ – குவியும் லைக்குகள்!

0
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மகா நடிகை கயலின் குறும்புத்தனமான வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனாவின் குழந்தையாக நடிக்கும் கயலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கயலின் அழகான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தற்போது சினிமா ரசிகர்களை விட சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றனர். அதற்கு காரணம் வாழ்க்கை நடைமுறைகளை கதையாக எடுப்பது தான். அந்த வகையில் கூட்டு குடும்பத்தின் அழகை எடுத்து சொல்லும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் நான்கு பேர் இருக்க அவர்கள் வாழ்க்கையில் படும் கஷ்டங்களை பற்றியும் ஒற்றுமையாக இருந்து குடும்ப பொறுப்புகளில் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது பற்றியும் இருக்கின்றனர்.

எந்த பிரச்சனையும் இன்றி நடந்து முடிந்த பார்வதி, பாஸ்கர் திருமணம் – வைரலாகும் “ராஜா ராணி 2” சீரியல் புகைப்படங்கள்!

இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். தனம், மூர்த்தி, மீனா, ஜீவா, முல்லை, கதிர், கண்ணன், ஐஸ்வர்யா என பல கதாபாத்திரங்கள் இணைந்து நடிப்பது தான் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. மேலும் இந்த சீரியலின் கயல் கதாபாத்திரத்தில் ஒரு குட்டி பாப்பா நடித்து வருகிறார். மீனா ஜீவாவின் மகளாக குடும்பத்தின் முதல் வாரிசாக கயல் கதாபாத்திரம் இருக்கிறது. கயலுக்கு மொட்டை போடுவது முதல் காது குத்து வரை நிஜமாக நடத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கயல் பாப்பா சிறு குழந்தையாக இருப்பது முதல் இந்த சீரியலில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். கதையில் மற்ற கதாபாத்திரங்கள் நடிக்க கயலும் அவர்களுடன் இணைந்து நடிப்பது எல்லாம் பார்க்கவே அழகாக இருக்கும். இந்நிலையில் மீனாவாக நடிக்கும் ஹேமா சதீஸ் மகா நடிகை கயல் என கயலின் குறும்புத்தனமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கயல் பாப்பா பிங்க் நிற உடையில் மீனாவுடன் விளையாடி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!