அரசியலில் குதித்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தனம் சுஜிதா – வைரலாகும் வீடியோ!

0
அரசியலில் குதித்த
அரசியலில் குதித்த "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் தனம் சுஜிதா - வைரலாகும் வீடியோ!
அரசியலில் குதித்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தனம் சுஜிதா – வைரலாகும் வீடியோ!

விஜய் டெலிவிஷன் அவார்ட் தொடர்பாக சீரியல் பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மக்களிடையே தங்கள் சீரியலுக்காக ஓட்டு கேட்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

வைரலாகும் வீடியோ:

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்ச்சி புரமோஷனுக்காக விஜய் டிவி தனியாக செலவு செய்யும். இன்றைய வெள்ளித்திரையில் இருக்கும் பல நடிகர், நடிகைகள், காமெடி நட்சத்திரங்கள் அனைவரும் விஜய் டிவியில் இருந்து சென்றவர்கள் தான். விஜய் அவார்ட்ஸ் போலவே விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தனிநபர் கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைவான வட்டியில் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

கடந்த வருடம் விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருதுகள் கூடிய விரைவில் நடைப்பெறவுள்ளது. இதில் பல விஜய் டிவி பிரபலங்கள் விருதுகளை பெறவுள்ளனர். இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியாக ’வெற்றி நடைபோடும் மதியமே’ என்ற பெயரில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சிக்காக சீரியல் பிரபலங்கள் அனைவரும் எந்த சீரியல் பெஸ்ட் என்ற வகையில் சண்டை போட்டு கொண்டு ரசிகர்களிடம் ஓட்டு கேட்கும் வகையில் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

அவர்கள் நடிக்கும் சீரியல்கள் பெயர்தான், அவர்களின் கட்சி பெயர் ஆகும். முத்தழகு, ராஜா ராணி, காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும், தென்ற வந்து என்னை தொடும்,செந்தூரப்பூவே சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ் என அனைத்து சீரியல் பிரபலங்கள் அனைவரும் இந்த ப்ரோமவில் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம், ஐஸ்வர்யா, கண்ணன் ஆகியோர் இந்த ப்ரோமோவில் உள்ளனர். அதில் சுஜித்ரா பெண் அரசியல்வாதி போன்று உடை அணிந்திருந்தார். எனவே அந்த விடியோவை பார்த்து ரசிகர்கள் ” அரசியலில் குதித்த தனம் அண்ணி” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!