‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி ஷீலாவின் புதிய அவதாரம் – புதிய தொடரில் என்ட்ரி! ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் லட்சுமி ஷீலாவின் புதிய அவதாரம் - புதிய தொடரில் என்ட்ரி! ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் லட்சுமி ஷீலாவின் புதிய அவதாரம் - புதிய தொடரில் என்ட்ரி! ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி ஷீலாவின் புதிய அவதாரம் – புதிய தொடரில் என்ட்ரி! ரசிகர்கள் உற்சாகம்!

விரைவில் விஜய் டிவியில் ‘பாரதிதாசன் காலனி’ என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இத்தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் ஷீலா இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

புதிய சீரியல்

சமீப காலமாக தமிழ் சின்னத்திரையின் முன்னணி டிவி சேனல்களில் பல புதிய சீரியல்களின் அணிவகுப்பு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் தற்போது ‘பாரதிதாசன் காலனி’ என்ற புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலும் விஜய் டிவி பாணியை போலவே கூட்டு குடும்ப கதைக்களத்துடன் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பாரதிதாசன் காலனி என்று பெயரிடப்பட்ட ஒரு காலனியில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை உள்ளடக்கிய ஏகப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மீண்டும் சண்டையை பெரிதாக்கும் மீனா, கதிர் முடிவு தவறு என சொல்லும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இவர்களுக்குள் நடக்கும் பாசப்போராட்டம், சண்டை, காதல், நட்பு, துரோகம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இந்த சீரியலின் கதைக்களம் நகர இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் இதுவரை காட்டப்படாத வித்தியாசமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் மக்களின் கவனம் ஈர்த்துள்ளது. இப்போது ‘பாரதிதாசன் காலனி’ சீரியலின் முக்கிய கதாப்பாத்திரங்களில் பல பிரபலமான முகங்கள் இடம்பிடித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதில் குறிப்பாக, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் லட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருந்த நடிகை ஷீலா கதாநாயகிக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஷீலாவின் லட்சுமி கதாப்பாத்திரம் இறந்ததை போல காட்டப்பட்டதற்கு பிறகு அவரை மிஸ் செய்து வந்த ரசிகர்கள் பலரும் இப்போது ‘பாரதிதாசன் காலனி’ சீரியலில் அவரது என்ட்ரியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனுடன் ‘பிக் பாஸ்’ பிரபலம் மோகன் வைத்யாவும் இந்த சீரியலில் இணைந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!