‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை தம்பி, தங்கையுடன் வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை தம்பி, தங்கையுடன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை தம்பி, தங்கையுடன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை தம்பி, தங்கையுடன் வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து மக்களிடம் நல்ல ஆதரவை பெற்று வரும் காவ்யா அறிவுமணியின் உடன் பிறந்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவ்யா அறிவுமணி:

விஜய் டிவி சீரியல்களில் படு சூடாக போய்க் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் 4 அண்ணன் தம்பிகளில் இரண்டாவது தம்பியான கதிருக்கு ஜோடியாக முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். ஆரம்ப கட்டத்தில் ஒளிபரப்பாகிய கதிர் முல்லை கெமிஸ்ட்ரி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டது. இவ்வாறு அவர்களது ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே சீரியலை பார்க்கும் ரசிகர் பட்டாளங்களும் இருந்தது.

இரவெல்லாம் வீட்டிற்கு வராத கோபி, அடித்து நொறுக்கிய தாத்தா – “பாக்கியலட்சுமி” சீரியலில் நாளை!

மேலும், விஜே சித்ரா இருந்தவரை கதிர் முல்லை கதாபாத்திரம் டாப்பில் இருந்தது. ஆனால் அவரது மறைவுக்கு பின் அவருக்கு பதிலாக முல்லை இடத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி தற்போது முல்லையாக நடித்து வருகிறார். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த போது பெரிய அளவுக்கு ரீச் இல்லை என்றாலும் ஓரளவுக்கு மக்களிடத்தில் சென்றடைந்தவரானார். ஆனால் முல்லையாக நடித்த பிறகு பிரபலம் அடைந்த சின்னத்திரை நடிகை ஆனார்.

அவரை ஆரம்பத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தற்போது அவர் நடிப்பை ஆதரித்து வருகிறார்கள். இவ்வாறு முல்லையாகிய காவியாவின் உடன் பிறந்த தம்பி, தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ததை தொடர்ந்து, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு வைரலாகி வருகிறது. மேலும், இவர் வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!