தமிழகத்தில் சொத்து வரி அதிரடியாக உயர்வு – அரசாணை வெளியீடு! பொதுமக்கள் அதிர்ச்சி!

0
தமிழகத்தில் சொத்து வரி அதிரடியாக உயர்வு - அரசாணை வெளியீடு! பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் சொத்து வரி அதிரடியாக உயர்வு - அரசாணை வெளியீடு! பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் சொத்து வரி அதிரடியாக உயர்வு – அரசாணை வெளியீடு! பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக சொத்து வரியில்‌ எந்த உயர்வும்‌ இல்லாததால்‌ உள்ளாட்‌சி அமைப்புகளின்‌ மொத்த வருவாயில்‌ சொந்த வருவாயின்‌ பங்கு அதிக அளவு குறைந்து உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ சொத்து வரி சீராய்வு செய்ய அரசு செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளது.

அதிரடியாக உயரும் சொத்துவரி:

சொத்து வரி என்பது ஒரு நில உரிமையாளர் உள்ளூர் அரசாங்கத்துக்கோ அல்லது அவரது பகுதியின் நகராட்சி நிறுவனத்துக்கோ செலுத்தும் ஆண்டுத் தொகையாகும். இந்தியாவில், ஒரு குறிப்பிட்ட பகுதியின் நகராட்சி நிறுவனம் ஆண்டுதோறும் அல்லது அரை ஆண்டுக்கு ஒரு முறை சொத்து வரியை மதிப்பிட்டு வரி வசூல் செய்கிறது. சொத்து வரி என்பது உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களின் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி வீதத்தை ஆண்டுதோறும் உயர்த்திட வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள 15 ஆவது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 11 (திங்கள்) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்த வகையில் தற்போது தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்களை உயர்த்த தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100%, தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75% வரி உயர்த்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது. 2022 -23 நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளிலும் சொத்து வரி மதிப்பு உயர்த்தப்பட உள்ளது. சென்னையின் பிரதான நகரப் பகுதியில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50%, சென்னையோடு 2011 இல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25 %சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

இதை அடுத்து சென்னையின் பிரதான நகரப் பகுதியில் உள்ள 601 -1200 சதுர அடி, 1201 -1800 சதுர அடி, 1801 சதுர அடி பரப்பளவுக்கு மேலான குடியிருப்பு கட்டடங்களுக்கு முறையே 75, 100, 150 சதவீதம் வரி அதிகரிக்கப்படுகிறது. இந்த சொத்து வரி சீராய்வு, மக்களை பாதிக்காத வகையிலும், உள்ளாட்சி அமைப்புகளின் செலவினங்களை எதிர்கொள்ளும் நோக்கிலும் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ள மாநிலங்களில் வசூலிக்கப்படும் சொத்து வரியை விட தமிழ்நாட்டில் தற்போது உயர்த்தப்பட உள்ள சொத்து வரி விகிதம் குறைவு தான் என தமிழக அரசு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!