பாவ்னியிடம் தனது காதலை சொல்லிய அமீர் – வைரலாகும் ப்ரோமோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
பாவ்னியிடம் தனது காதலை சொல்லிய அமீர் - வைரலாகும் ப்ரோமோ! ரசிகர்கள் உற்சாகம்!
பாவ்னியிடம் தனது காதலை சொல்லிய அமீர் - வைரலாகும் ப்ரோமோ! ரசிகர்கள் உற்சாகம்!
பாவ்னியிடம் தனது காதலை சொல்லிய அமீர் – வைரலாகும் ப்ரோமோ! ரசிகர்கள் உற்சாகம்!

பாவ்னி திருமணமாகி கணவரை இழந்தவர் என்று தெரிந்தும் கூட பாவனியை அமீர் காதலித்து வருகிறார். தற்போது தன்னுடைய காதலை பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனியிடம் வெளிப்படுத்தும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

காதலை வெளிப்படுத்திய அமீர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக தான் பாவனியும் அமீரும் முதன் முதலில் சந்தித்து கொண்டனர். பிக் பாஸ் வீட்டிற்குள் அமீர் வந்த நாளில் இருந்தே பாவனியுடன் மட்டுமே பழகி வந்தார். மற்ற போட்டியாளர்களுடன் அவ்வளவாக பழகவில்லை. இதுமட்டுமல்லாமல் இரவு நேரங்களில் கூட தூங்காமல் இருவரும் தனியாக பேசியபடியே இருந்தனர். இதனால் இருவரும் காதலிக்கிறார்களோ என பல வதந்திகள் பரவத் தொடங்கியது. பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த விவகாரம் மேலும் வதந்தியை கிளப்பிவிட்டது.

ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்காக வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – மெகா சங்கமம் ப்ரோமோ ரிலீஸ்!

பிக் பாஸ் வீட்டை விட்டு அமீர் மற்றும் பாவனி வெளியேறிய பிறகும் கூட இருவரும் ஒன்றாக பல பகுதிகளுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றனர். பாவனியிடமே நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா, அமீரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகிறீர்களா என கேட்கப்பட்டது. ஆனால், பாவனி நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என கூறி அனைத்து வதந்திகளுக்கும் முற்று புள்ளி வைத்தார். தற்போது பாவனியும் அமீரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஒன்றாக சேர்ந்து கலந்துகொண்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

அமீர் நடன இயக்குனர் என்பது நம் அனைவருக்குமே தெரியும். பாவனியும் அமீருக்கு சமமாக டான்ஸ் ஆடி நடுவர்களை வியக்க வைத்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு நடுவே பாவனியிடம் அமீர் நாம் காதலிக்கும் நபர்களை விட நம்மை காதலிக்கும் ஒருத்தரை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என கூறி ப்ரொபோஸ் செய்கிறார். உடனே ராஜு அப்போ எத்தனை பேரை திருமணம் செய்து கொள்வது என கூறி நக்கல் செய்கிறார். ராஜு அப்படி கூறியதும் அனைத்து போட்டியாளர்களும் வயிறு குலுங்க சிரிக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here