பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய தொடர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய தொடர் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய தொடர் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய தொடர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா தொடரின் மூலமாக அறிமுகமான கண்மணி தற்போது ஜீ தொலைக்காட்சியில் அமுதாவும்__ என்கிற சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனவே கூடிய விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

அமுதாவும்__:

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி கதாபாத்திரம் மூலமாக ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான ஆதரவைப் பெற்றவர் தான் கண்மணி. ஆரம்பத்தில் அஞ்சலி வில்லி கதாபாத்திரமாகவே இருந்து வந்தது. பின்பு, குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஏற்றுக் கொண்ட ஒரு நல்ல கதாபாத்திரமாக மாற்றப்பட்டது.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

எனக்கு இந்த கதாபாத்திரம் நினைத்த அளவுக்கு ரீச்சை கொடுக்கவில்லை என சீரியலில் இருந்து கண்மணி விலகிக்கொண்டார். இதற்குப் பிறகு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் அமுதாவும்__ என்கிற சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த சீரியலின் சீரியல் ப்ரோமோ பல மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகிய நிலையிலும் சீரியல் இன்னும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை. இதனால் சீரியல் பாதியிலேயே முடித்து விட்டதாக வதந்திகள் பரவிக் கொண்டிருந்தது.

Exams Daily Mobile App Download

இதற்கு நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும், கூடிய விரைவில் அமுதாவும்__ என்கிற சீரியல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனவும் கூறியிருந்தார். இதன்படி தற்போது இன்னும் சில வாரங்களில் அமுதாவும்__ என்கிற சீரியல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. கண்மணிக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடித்து வரும் அருண் பத்மநாபன் நடிக்க இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here