பிறந்தநாள் விழாவன்று கோபியை பற்றிய உண்மையை கூறும் தாத்தா – ப்ரோமோ ரிலீஸ்!

0
பிறந்தநாள் விழாவன்று கோபியை பற்றிய உண்மையை கூறும் தாத்தா - ப்ரோமோ ரிலீஸ்!
பிறந்தநாள் விழாவன்று கோபியை பற்றிய உண்மையை கூறும் தாத்தா - ப்ரோமோ ரிலீஸ்!
பிறந்தநாள் விழாவன்று கோபியை பற்றிய உண்மையை கூறும் தாத்தா – ப்ரோமோ ரிலீஸ்!

பிறந்தநாள் விழாவை எப்படியாவது நிறுத்தியே தீர வேண்டும் என கோபி பல நாடகத்தை போட்டார். ஆனால், எதுவுமே கோபிக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் ராமமூர்த்தி தாத்தாவிற்கு பேச்சு வருவது போலவும், குடும்பத்தினரிடம் கோபியை பற்றிய உண்மையை போட்டுடைப்பது போன்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாக்கியாவை பல மாதக்கணக்கில் கோபி ஏமாற்றி கொண்டிருக்கிறார். எப்போது தான் பாக்கியாவிடம் கோபி கையும் களவுமாக பிடிபடுவார் என எதிர்பார்த்த சமயத்தில் தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்த நாள் விழாவிற்கு ராதிகா கண்டிப்பாக வருங்கால கணவரையும் அழைத்து வருகிறேன் என பாக்கியாவிடம் வாக்கு கொடுத்திருக்கிறார்.

ஷூட்டிங்க் ஸ்பாட்டில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா செய்த காரியம் – கடுப்பான இயக்குனர்!

இந்த தடவையும் பாக்கியா டீச்சர் வீட்டுக்கு நீங்கள் வரவில்லையெனில் இனி உங்களிடம் பேச போறதே இல்லை என ராதிகா கூறிவிடுகிறார். இதற்கு நடுவே ராதிகாவிடம் கோபி பேசி கொண்டிருப்பதை கதிர் கேட்டு விடுகிறார். பின்பு, எப்படியோ பொய் சொல்லி கதிரையும் நம்பவைத்து விடுகிறார். எப்படியாவது பிறந்தநாள் விழாவை நிறுத்தியே தீர வேண்டும் என நெஞ்சு வலிப்பது போல நடிக்கிறார். ஆனால் கோபிக்கு இந்த பிளானும் வெற்றியை கொடுக்கவில்லை. கோபி போடும் நாடகமெல்லாம் ராமமூர்த்தி தாத்தாவிற்கு நன்றாகவே தெரிகிறது. அவரால் பேச முடியாது என்கிற காரணத்தை வைத்து தான் கோபி தப்பித்து கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

நெஞ்சு வலி என்று சொல்லியும் ராதிகா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாமல் விட போவதில்லை என அடம்பிடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ராமமூர்த்தி தாத்தாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வருகிறது. குடும்பத்தினர்கள் அனைவரும் ராமமூர்த்தி தாத்தாவிற்கு பேச்சு வருவதை பார்த்து மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆனால், கோபி மட்டும் மாட்டிக்கொள்ள போகிறோம் என பதறி கொண்டிருக்கிறார். இந்நிலையில், பிறந்தநாள் விழாவன்று கோபியை பற்றிய உண்மையை ராமமூர்த்தி தாத்தா போட்டுடைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here