பிறந்தநாள் விழாவை நிறுத்துவதற்காக உடம்பு சரியில்லாதது போல நடிக்கும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

0
பிறந்தநாள் விழாவை நிறுத்துவதற்காக உடம்பு சரியில்லாதது போல நடிக்கும் கோபி - ப்ரோமோ ரிலீஸ்!
பிறந்தநாள் விழாவை நிறுத்துவதற்காக உடம்பு சரியில்லாதது போல நடிக்கும் கோபி - ப்ரோமோ ரிலீஸ்!
பிறந்தநாள் விழாவை நிறுத்துவதற்காக உடம்பு சரியில்லாதது போல நடிக்கும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

ராமமூர்த்தி தாத்தாவின் 75வது பிறந்த நாள் விழாவிற்கு ராதிகா கோபியையும் கூட்டி வருகிறேன் எனக் கூறியிருக்கிறார். எப்படியாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாமல் போக வேண்டும் என நினைத்து உடம்பு சரியில்லாதது போல கோபி நடித்து மருத்துவமனையில் அட்மிட் ஆவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோபி எப்போது தான் மாட்ட போகிறார், ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போகிற விஷயத்தை குடும்பத்தினர்கள் எப்போது அறிந்து கொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்த நாளுக்காக பாக்கியாவின் வீட்டிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் வந்திருக்கிறார்கள். ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்த நாள் விழாவிற்கு வர சொல்லி ராதிகாவையும் பாக்கியா அழைத்திருக்கிறார்.

ஷூட்டிங்கில் கயல் பாப்பாவுடன் சேர்ந்து அட்டகாசம் செய்யும் மீனா – வைரலாகும் வீடியோ!

உங்களது வருங்கால கணவரையும் கண்டிப்பாக அழைத்து வரவேண்டும் எனவும் கூறியிருக்கிறார். கண்டிப்பா கூட்டி வருகிறேன் என ராதிகாவும் கூறியிருக்கிறார். அனைவரின் முன்னிலையிலும் கோபியின் உண்மையான முகம் வெளிவரப் போகிறது என கோபி பதட்டத்தில் இருக்கிறார். பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணனை பிடித்து கண்டபடி திட்டிவிடுகிறார். கோபிக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது. இந்நிலையில் ராதிகாவிடம் கோபி மொபைல் போனில் பேசி கொண்டிருப்பதை கதிர் பார்த்து விடுகிறார்.

Exams Daily Mobile App Download

ராதிகாவை கோபி திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பதை கதிர் கண்டுபிடித்து விடுகிறார். இந்நிலையில் பாக்கியாவின் வீட்டில் நடைபெறவிருக்கும் பிறந்தநாள் விழாவை நிறுத்தியே தீர வேண்டும் என கோபி முடிவு செய்கிறார். இதனால் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காக உடம்பு சரியில்லாதது போல நடித்து மருத்துவமனையில் அட்மிட் ஆவது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!