தமிழக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் – பதற்றத்தில் மக்கள்! போராட்ட எதிரொலி!

0
தமிழக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் - பதற்றத்தில் மக்கள்! போராட்ட எதிரொலி!
தமிழக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் - பதற்றத்தில் மக்கள்! போராட்ட எதிரொலி!
தமிழக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் – பதற்றத்தில் மக்கள்! போராட்ட எதிரொலி!

கடந்த சில நாட்களாக விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் நிலம் உரிமையாளர்களிடையே பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலபருத்திக்குடி கிராமத்தில் 100 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இங்கு நேரடி நெல் விதைப்பு முறையில் விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேரடி நெல் விதைப்பு முறையால் நாற்று பறித்தல், நாற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லுதல், நடவு பணி போன்ற பணிகள் நடைபெறாததால் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி நேரடி நெல் விதைப்பு முறைக்கு விவசாய கூலி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Exams Daily Mobile App Download

மேலும் அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த திங்கள் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விவசாய தொழிலாளர்களுக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இந்த தள்ளு-முள்ளு சம்பவத்தின்போது மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 38 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

NFL நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கிராமத்தில் 3 விவசாயிகள், இன்று நேரடி நெல் விதைப்பு செய்ய உள்ளனர். இந்நிலையில் அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதனால், மேல பருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி காலனி தெரு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here