Post Office ல் முதலீடு செய்தால் 2 லட்சம் வரை லாபம் – முழு விவரம் இதோ!

0
Post Office ல் முதலீடு செய்தால் 2 லட்சம் வரை லாபம் - முழு விவரம் இதோ!
Post Office ல் முதலீடு செய்தால் 2 லட்சம் வரை லாபம் - முழு விவரம் இதோ!
Post Office ல் முதலீடு செய்தால் 2 லட்சம் வரை லாபம் – முழு விவரம் இதோ!

போஸ்ட் ஆஃபிஸ் மக்களின் தேவைக்கேற்ப பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டத்தில் முதலீடு செய்தால் 124 மாதங்களில் 2 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ்:

இந்தியாவில் கொரோனா கால நெருக்கடியில் மக்கள் அதிகமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இதன் காரணமாக நாடெங்கும் வறுமை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் மக்கள் முதலீடு செய்வதன் தேவைகளை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கொரோனா காலம் அமைந்தது. எனவே மக்கள் அதிகளவில் முதலீடு செய்வதில் ஆர்வமுடன் உள்ளனர். மேலும் இந்தியாவில் வங்கிகளுக்கு நிகராக போஸ்ட் ஆஃபீசிலும் வட்டி விகிதம் அதிகமாக கிடைப்பதால் மக்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நீண்ட கால சிறு முதலீட்டுக்கு பாதுகாப்பான ரிட்டன் மற்றும் சிறப்பான வட்டி வழங்குவதில் அஞ்சல முதலீடுகள் சிறந்து விளங்குகிறது. இவற்றில் வருங்கால வைப்பு நிதி, செல்வ மகள் சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் 7 சதவீதத்துக்கும் அதிகமான வட்டியை வழங்குகின்றன. இதை தொடர்ந்து பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜா திட்டங்களில் மாதம் ரூ. 12,500 முதலீடு செய்தால் வருமான வரி விலக்கு பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்போருக்கான முக்கிய அறிவிப்பு – தகவல் வெளியீடு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் கிஷான் விகாஷ் பத்ரா திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 6.9 சதவீத வட்டி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் 10 ஆண்டுகள் 4 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தத் திட்டத்தில் இன்று 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் கூட 124 மாதங்களில் பணம் ரூ.2 லட்சமாக பெருகும். இது வங்கிகளின் நிலையான வைப்புத் தொகையை விட அதிகமாகும். இந்த கிஷான் விகாஷ் பத்ரா கணக்கை ஒருவர் ரூ.1000 டெபாசிட் செய்து தொடங்கலாம். இதேபோல் பல்வேறு திட்டங்கள் அஞ்சலகங்களில் காணப்படுவதால் மக்கள் கவர்ச்சிகரமான வட்டியை பெறலாம் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!