தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரிப்பு – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரிப்பு - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரிப்பு - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரிப்பு – அமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆவின் நிறுவனத்தில் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்கப்படும் என அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆவின் நிறுவனம்:

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் மக்களுக்கு குறைந்த விலையில் பால் வழங்கி வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று பால் பண்ணைகளின் வாயிலாக சமன்படுத்தபட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால் , கொழுப்புசத்து நிறைந்த பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் என்ற வகைகளில் அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டராக நாளொன்றுக்கு 14.55 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வோர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அத்துடன் ஆவினில் மோர், தயிர், லஸ்ஸி , இனிப்பு உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளிலும் வாட்டர் பிளாண்ட் உள்ளதால் விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிப்பு பணி தொடங்க உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். மேலும் வருவாய் அதிகரிக்க பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மாதத்திற்கு 10 முறை ATM-களில் பணம் எடுக்க இலவசம் – மத்திய அமைச்சர் தகவல்

தமிழகத்தில் உள்ள ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்பட உள்ளது. 1/2 மற்றும் 1 லிட்டர் பாட்டில்களை பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில் ஆவின் குடிநீரை விற்க திட்டமிட்டப்பட்டுள்ளது. ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here