இன்ஸ்டாகிராம் பயனர்கள் கவனத்திற்கு – செயலியில் மொழி மாற்ற வசதி!

0
இன்ஸ்டாகிராம் பயனர்கள் கவனத்திற்கு - செயலியில் மொழி மாற்ற வசதி!
இன்ஸ்டாகிராம் பயனர்கள் கவனத்திற்கு - செயலியில் மொழி மாற்ற வசதி!
இன்ஸ்டாகிராம் பயனர்கள் கவனத்திற்கு – செயலியில் மொழி மாற்ற வசதி!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலியில், வெளி மாநிலத்தை சேர்ந்த அல்லது வெளி நாடுகளை சேர்ந்த நண்பர்களுடன் உரையாடுவதற்கு ஒரு எளிய மொழி மாற்ற வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மொழி மாற்ற வசதி

உலகளவில் சமூக வலைதள பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது இன்ஸ்டாகிராம் செயலி. ஏனென்றால் உலக தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பெரும்புள்ளிகள் என பலரும் இன்ஸ்டாகிராம் வலைதளத்தை பயன்படுத்துவதால் இவர்களை பின் தொடர்வதற்காகவே அதிகமானோர் இன்ஸ்டாகிராம் செயலியை உபயோகப்படுத்தி வருகின்றனர். இது தவிர இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ், மெசேஜ்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளிகள் மூடல் எதிரொலி – அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்!

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய மொழி மாற்ற வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வேற்று மொழியிலான ஸ்டோரி போஸ்ட்டை நமக்கு புரிந்த மொழியில் விளக்கும் சிறப்பம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் மொழி மாற்ற வசதியை கிளிக் செய்தவன் மூலம் அந்த பதிவுகளை உங்களுக்கு தேவையான மொழியை மாற்றிக்கொள்ள முடியும். இந்த சேவைகள் உலகம் முழுவதும் உள்ள ஏறத்தாழ 90 மொழிகளை, மொழி பெயர்ப்பு செய்வதற்கான அணுகல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு, இன்ஸ்டாகிராம் செயலியில் கமென்ட், கேப்சன், பயனர்களின் முகப்பு பக்கம் உள்ளிட்ட அம்சங்களில் மொழி பெயர்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஸ்டோரி போஸ்ட்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இந்த மொழி பெயர்ப்பு வசதி பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதி தற்போது ஆடியோ பதிவுகளுக்கு உருவாக்கப்படவில்லை என்றாலும், பதிவு, ரீல்ஸ்களில் இவ்வசதியை இணைக்க சோதனை மேற்கொள்ளப்படுவதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!