தமிழக உடற்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு – TNSED செயலி பயன்படுத்தும் எளிய வழிமுறைகள் இதோ!

0
தமிழக உடற்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு - TNSED செயலி பயன்படுத்தும் எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக உடற்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு - TNSED செயலி பயன்படுத்தும் எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக உடற்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு – TNSED செயலி பயன்படுத்தும் எளிய வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் பள்ளிகளில் TNSED செயலி வாயிலாக ஆசிரியர்களின் விடுப்பு, தற்செயல் விடுப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தற்போது உடற்கல்வி ஆசிரியர்களை TNSED செயலியை பயன்படுத்தி Battery Test செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான எளிய வழிமுறைகளை பார்ப்போம்.

TNSED செயலி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி உள்ளிட்ட தேவைகளுக்கு உயர் அலுவலரிடம் சென்று எழுத்து வடிவில் விண்ணப்பிக்க வேண்டும். இதனால் ஆசிரியர்களுக்கு கால தாமதமும் அத்துடன் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் TNSED என்ற செயலி தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவும் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம் – முழு விவரம் இதோ!

அதன் தொடர்ச்சியாக உடற்கல்வி ஆசிரியர்களை TNSED செயலியை பயன்படுத்தி Battery Test செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் இதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இதற்கு முதலில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் தங்கள் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் Battery Test நடத்த mapping செய்வார்கள். அதன்பிறகு ஆசிரியர்கள் தங்களின் Teacher id & password பயன்படுத்தி login செய்ய வேண்டும். அதன் பின்பு இவர்களால் Battery Test நடத்த இயலும்.

1. TNSED செயலியில் login செய்த பிறகு “More option” click செய்ய வேண்டும். அதன்பின்பு settings கிளிக் செய்ய வேண்டும்.

2. இதற்கு அடுத்து PET student list என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது map செய்யப்பட்டுள்ள பள்ளிகள் பெயர்கள் காண்பிக்கப்படும்.

3. அதன்பின்பு ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள பிரிவுகளை கிளிக் செய்த பிறகு PET student list stored locally என காண்பிக்கப்படும்.

4. இதற்கு அடுத்ததாக sports icon என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த திரையில் Battery Test என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. அதன்பின்பு my school என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது map செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் விவரங்கள் மற்றும் பிரிவுகளின் விவரங்கள் தோன்றும்.

6. இறுதியாக நீங்கள் எந்த பிரிவில் Battery Test மேற்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானித்து அதனை கிளிக் செய்ய வேண்டும். இப்பொது Battery Test தொடங்கப்பட்டு விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!