அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?

இந்தியாவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு தானியங்கள் கிடைக்கும் வகையில் மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். இப்போது உங்கள் பழைய மொபைல் எண்ணை புதுப்பிக்க வேண்டுமா அதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

ரேஷன் கார்டு

இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நடைமுறையில் உள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதாரை எண்ணை இணைப்பதன் மூலம் இந்த திட்டத்தை பெற முடியும். இந்த திட்டத்தின் படி எந்த மாநிலத்திலும் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை பெற முடியும். மேலும் இந்த திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கோயம்புத்தூரில் நாளை (மே 19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

அத்துடன் அரசின் நலத்திட்டங்களை ரேஷன் கார்டின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. அதனால் ரேஷன் கார்டில் இடம்பெற்றிருக்கும் தனிநபரின் விவரங்கள் சரியானதாக இருக்கும். ரேஷன் கார்டில் தங்களின் பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபரின் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் நீங்கள் உடனடியாக இதனை புதுப்பிக்க வேண்டும். புதிய விவரங்களை புதுப்பிக்கவில்லையெனில் ரேஷன் பொருட்கள் அதனுடன் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

தற்போது உங்களின் மொபைல் எண்ணை புதுப்பிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1. முதலாவதாக https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

2. இப்போது திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். இதில் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும் என்று கொடுக்கப்பட்டிருக்கும். இப்போது இதில் கேட்கப்பட்டுள்ள உங்களின் தனிநபர் விவரங்களை நிரப்ப வேண்டும்.

3. அதன்பின் குடும்பத் தலைவரின் ஆதார் எண்/என்எஃப்எஸ் ஐடி உள்ளிட்டவை கொடுக்க வேண்டும்.

4. இதையடுத்து உங்களின் ரேஷன் கார்டு எண்ணையும், அத்துடன் குடும்பத் தலைவரின் பெயரை உள்ளிட வேண்டும்.

5. இறுதியாக புதிய மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!