ஆதார் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

0
ஆதார் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
ஆதார் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
ஆதார் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நாம் திருத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் இத்தகைய அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்வதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம்.

ஆதாரில் மொபைல் எண் மாற்றம்:

நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் தனித்துவம் அளிக்கும் வகையில் கை ரேகை, கண் விழிகள் உள்ளிட்டவைகளை ஸ்கேன் செய்து அதன் அடிப்படையில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் கார்டில் 12 இலக்க எண் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆதார் கார்டு தற்போது தனியொரு மனிதனின் அடையாள அட்டையாக கருதி அனைத்து செயல்பாடுகளுக்கு முக்கியமான ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது வங்கி கணக்கு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக கருதப்பட்டு வருகிறது.

தமிழக ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைப்பு – பயணிகள் மகிழ்ச்சி!

இத்தகைய ஆவணத்தை நாம் அனைவரும் பாதுகாப்பாக வைத்திருத்தல் அவசியம். இந்த ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் மாற்றி திருத்தம் செய்து கொள்ள முடியும். இந்த திருத்தங்களை இ-சேவை மற்றும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். ஆனால் இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம். ஏனென்றால் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும் அதனை கொடுத்தால் மட்டுமே திருத்தம் செய்ய முடியும்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தொலைந்து விட்டால் புதிய நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். புதிய மொபைல் எண்ணை அப்டேட் செய்வதற்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • முதலில் https://ask.uidai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்களது மொபைல் எண்ணை பதிவிட்டு கேப்சா குறியீட்டை கொடுத்து Send OTP கொடுக்க வேண்டும்.
  • பின்னர் உங்களது மொபைல் எண்ணுக்கு வந்திருக்கும் OTP ஐ பதிவிட்டு Submit OTP மற்றும் Proceed என்று கொடுக்க வேண்டும்.
  • பின்னர் தோன்றும் மெனுவில் Online Aadhaar Services என்பதில் Update phone number ஆப்ஷனை கிளிக் செய்து தோன்றும் கேப்சா குறியீட்டை பதிவிட்டு Save மற்றும் Proceed என்று கொடுக்க வேண்டும்.
  • பின்னர் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் மொபைல் எண் திருத்தம் செய்வதற்கான அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்கும். அதன் மூலம் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் அங்கு சென்று உங்களது மொபைல் எண்ணை மாற்றம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here