PF பயனர்கள் கவனத்திற்கு – வேலைகளை மாற்றும் போது EPF கணக்கை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

0
PF பயனர்கள் கவனத்திற்கு - வேலைகளை மாற்றும் போது EPF கணக்கை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?
PF பயனர்கள் கவனத்திற்கு - வேலைகளை மாற்றும் போது EPF கணக்கை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?
PF பயனர்கள் கவனத்திற்கு – வேலைகளை மாற்றும் போது EPF கணக்கை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

இப்போது ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர், வேறு ஒரு நிறுவனத்திற்கு செல்ல இருந்தால் அவரது PF கணக்குகளை புதிய நிறுவனத்துடன் இணைக்கவேண்டியது கட்டாயமாகும். அதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

PF கணக்கு மாற்றம்

டிஜிட்டல் மயமாக்கல் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு வகையான சேவைகளை தற்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்தே எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் ஆன்லைன் சேவைகள் பலரது நேரங்களை மிச்சப்படுத்தியுள்ளது. அப்படி ஆதார் எண் புதுப்பிப்பு, வங்கி கணக்கு திறத்தல், பணம் அனுப்புதல் போன்ற பலவற்றை நாம் வீடுகளில் இருந்தே மேற்கொள்ள முடியும். அந்த வரிசையில் தற்போது பணியிடங்களை மாற்றும் EPF பயனர்கள் தங்களது கணக்குகளை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும்.

கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரவல் – இந்தியா முதலிடம்!

அதற்காக EPF பயனர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அலையைத் தேவையில்லை. இந்த சேவைகளையும் தற்போது ஆன்லைனில் மேற்கொள்ளக்கூடிய வகையில் எளிதாக்கப்பட்டு விட்டது. இது தவிர PF வாடிக்கையாளர்கள் இப்போது ஆன்லைன் மூலமாக EPF கணக்குகளை புதுப்பிக்க முடியும். அந்த வகையில் சமீபத்திய அங்கீகரிக்கப்பட்ட செட்டில்மென்ட், இடமாற்றங்கள் போன்றவைகளை மாற்ற முடியும்.

இந்த மாற்றங்கள் வழக்கமாக ஊழியர் இன்னொரு நிறுவனத்திற்கு செல்லும்போது செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் PF கணக்கை மாற்றுவதற்கு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

  • முதலில் EPFO வின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • உள்நுழைய உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தவும்.
  • இப்போது ஆன்லைன் சேவைகள் பிரிவுக்கு சென்று One Member One EPF account என்பதை கிளிக் செய்யவும்.
  • தற்போதைய வேலைக்கான உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் PF கணக்கு விவரங்களை சரிபார்க்கவும்
  • Get details விருப்பத்தை கொடுக்கவும். அவ்வாறு செய்தவுடன், முந்தைய PF கணக்கு விவரங்கள் தோன்றும்.
  • அடுத்து நீங்கள் சான்றளிப்பதற்காக முந்தைய முதலாளி அல்லது தற்போதைய முதலாளியை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் UAN பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐ பெற Get OTP என்பதை கிளிக் செய்யவும்.
  • கடைசியாக OTP ஐ உள்ளிட்டு submit கொடுக்கவும்.

இப்போது கோரிக்கையை சமர்ப்பித்த பிறகு காத்திருக்க வேண்டும். தற்போதைய முதலாளி அல்லது உங்கள் முந்தைய நிறுவனம் தேவையான படிவங்களை உறுதிசெய்தவுடன், உங்கள் PF கணக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றப்படும். மேலும் ஆன்லைன் படிவத்தை தாக்கல் செய்த 10 நாட்களுக்குள், தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாளியிடம் உங்கள் ஆன்லைன் PF பரிமாற்ற கோரிக்கையின் சுய சான்றளிக்கப்பட்ட நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். இது PDF வடிவில் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் – முதல்வர் ஆலோசனை!

பிறகு, நிறுவனத்தின் முதலாளி PF பரிமாற்ற கோரிக்கையை டிஜிட்டல் முறையில் அங்கீகரிப்பு செய்வார். இதை தொடர்ந்து, தற்போதைய முதலாளியிடம் புதிய கணக்கிற்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதையடுத்து ஆன்லைனில் விண்ணப்பத்தை கண்காணிக்கப் பயன்படும் ஒரு டிராக்கிங் ஐடி உருவாக்கப்படும். சில சந்தர்ப்பங்களில், PF பரிமாற்ற செயல்முறையை நிறைவு செய்வதற்காக நீங்கள் டிரான்ஸ்பர் க்ளைம் படிவத்தை (படிவம் 13) பதிவிறக்கம் செய்து முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

PF பரிமாற்ற செயல்முறையை செயல்படுத்த, திருத்தப்பட்ட படிவம் 13, ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் , அடையாளச் சான்று (POI) ஆவணங்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. அதே போல UAN எண், தற்போதைய முதலாளியின் விவரங்கள், நிறுவன எண், கணக்கு எண், சம்பள வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் உங்கள் பழைய மற்றும் புதிய PF கணக்கு விவரங்கள் ஆகியவற்றை பெற்றிருப்பது அவசியமாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!