ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் தற்போது ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் மானிய விலையில் அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்களை பெற்று வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கினர். இந்த நிலையில் ரேஷன் கார்டு என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல இடங்களில் இருப்பிட சான்றாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. முன்பெல்லாம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும்.

பிப்ரவரி.15 முதல் அனைத்து கொரோனா கால கட்டுப்பாடுகளும் நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

தற்போது வீட்டிலிருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் அந்தந்த மாநிலங்களின் உணவு வழங்கல் துறையின் இணையதள பக்கம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ரேஷன் கார்டில், புதிய பெயர்களை சேர்த்தல், ஏற்கனவே உள்ள உறுப்பினர்களை ஏதேனும் ஒரு காரணத்திற்காக நீக்குதல் போன்ற வேலைகளையும் ஆன்லைன் மூலமாகவே செய்யலாம். ஆனால் அதற்கு உரிய ஆவணம் சமர்ப்பிப்பது அவசியமாகும். அப்போது மட்டுமே பெயர் நீக்கம் செய்ய முடியும். தற்போது தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்து கீழ்கண்ட பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • முதலில் https://www.tnpds.gov.in/ என்ற அரசின் அதிகாரப்பூரவ இணையப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்து அதில் உங்கள் ரேஷன் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
  • பிறகு கீழ் உள்ள கட்டத்தில் திரையில் தோன்றும் கேப்ட்சா எண்ணை பதிவிட வேண்டும்.
  • அடுத்ததாக உங்களின் மொபைலுக்கு ஒரு OTP எண் வரும்.அதை உள்ளீட்டு `பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
  • பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் `அட்டை பிறழ்வுகள்’ என்ற விருப்பத்தை தேர்வு செய்து புதிய கோரிக்கை’ என்பதை கிளிக் செய்யவும்.
  • குடும்ப உறுப்பினர் நீக்கம் என்பதில் யார் பெயரை நீக்கம் செய்ய வேண்டுமோ அதை பதிவிட்டு. என்ன காரணம் என்பதையும் குறிப்பிட்ட வேண்டும். மேலும் அதற்கான உரிய சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • மேற்கண்ட நடைமுறைகளை சரியாக முடிந்த பிறகு 2, 3 நாட்களுக்குள் பெயர் நீக்கம் ஆகிவிடும். அதை இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!