ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைனில் நீக்குவது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைனில் நீக்குவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைனில் நீக்குவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைனில் நீக்குவது எப்படி? எளிய வழிமுறைகள்!

தமிழகத்தில் ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்வதற்கு, அனைவரும் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தற்போது அதை ஆன்லைனிலேயே செய்யலாம். இந்த வகையில் ஆன்லைனில் எளிய வழிமுறைகள் மூலம் பெயர் நீக்கம் செய்யலாம்.

எளிய வழிமுறைகள்:

அனைத்து இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு உள்ளது. இந்த ரேஷன் கார்டு மூலம் சாமானிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் அட்டை டிஜிட்டல் கார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் அட்டைகள் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகையான தரநிலை ரேஷன் கார்டுகள் உள்ளன.

தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் – கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை!

இந்த ரேஷன் அட்டை மூலம் கொரோனா நிவாரண நிதி, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் குடும்ப அட்டையில் உறுப்பினர் பெயரை நீக்கம் அல்லது சேர்த்தல் செய்வதற்கு தற்போது ஆன்லைனில் எளிய வழிமுறைகள் உள்ளன.

1.ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்ய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் https://www.tnpds.gov.in/ என்றஇணையதளத்திற்கு செல்லவும்

2.வலைதளத்தில் `பயனாளர் நுழைவு’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

3.பிறகு, ரேஷன் கார்டில் எந்த தொலைபேசி எண்ணை இணைத்துள்ளீர்களோ அந்த எண்ணை, அங்குள்ள கட்டத்தில் உள்ளீடு செய்யவும். அடுத்ததாக, கேப்ட்சா (Captcha) எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, `பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

4.பதிவு செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு OTP எண் வரும். அந்த எண்ணை உள்ளீடு செய்து, `பதிவு செய்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

5.குடும்ப நபர்கள், அட்டை எண், பெரியவர்/ சிறியவர் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப அட்டை செயலில் உள்ளதா என்பதன் விவரம் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.

6.பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் `அட்டை பிறழ்வுகள்’ என்ற தேர்வை க்ளிக் செய்யவும். பிறகு `புதிய கோரிக்கை’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

7.குடும்ப அட்டை எண், குறியீடு எண் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின், ‘சேவையை தேர்வு செய்யவும்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

8.கொடுக்கப்பட்டிருக்கும் சேவை தேர்வுகளில் ‘குடும்ப உறுப்பினர் நீக்க’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

9.குறிப்பிட்ட நபரை எதற்காக நீக்கம் செய்கிறீர்கள் என்பதன் காரணத்தைக் குறிப்பிட வேண்டும்.

10. திருமணமாகி சென்ற மகள், உயிரிழந்த அப்பா என, குடும்ப உறுப்பினர் பெயரை எதனால் நீக்கம் செய்கிறீர்களோ அதற்கான `ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

11.`உறுதிப்படுத்துதல்’ என்பதை டிக் செய்து, `பதிவு செய்ய’ என்பதை க்ளிக் செய்யவும். பிறகு 2, 3 நாட்களுக்குள் பெயர் நீக்கம் ஆகிவிடும். மேலும் இணையதளம் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!