தமிழக ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை நீக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!

0
தமிழக ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை நீக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!
தமிழக ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை நீக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!
தமிழக ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை நீக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!

தமிழகத்தில் தனிநபரின் அடையாள அட்டைகளுள் ஒன்று ரேஷன் கார்டு. தற்போது இந்த ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்குவதற்கான வழிகாட்டுதல்களை ஆன்லைன் முறையில் மேற்கொள்ளலாம். இதற்கான எளிய வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் அனைவருக்கும் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமானதாகும். ஏனெனில் இந்த ரேஷன் கார்டு மூலமாக அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதில் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு வெள்ளை ரேஷன் கார்டு மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு பிங்க் ரேஷன் கார்டு என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி உணவு பொருட்களை பொதுமக்கள் பெற்றுகின்றனர். தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – பிப்ரவரி 22 கடைசி நாள்!

அதனால் சொந்த ஊரை விட்டு வெளி மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள் கூட தங்கள் கைரேகை பயன்படுத்தி உணவு பொருட்களை பெற முடிந்தது. முன்னதாக ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள தாலுகா அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். இப்போது அனைத்து துறைகளிலும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கார்டிலும் திருத்தங்களை ஆன்லைன் முறையிலே மேற்கொள்ளலாம். இதனை பற்றி விரிவாக தற்போது பார்க்கலாம்.

1. முதலாவதாக https://www.tnpds.gov.in/ என்ற தமிழக அரசுக்கான இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்த இணையதளம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.

2. இதில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். அடுத்ததாக கேப்ட்சா எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுக்க வேண்டும்.

4. அதன் பின்னர் பதிவு செய் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பி வைக்கப்படும்.

6. குடும்ப நபர்கள், அட்டை எண், பெரியவர் / சிறியவர் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப அட்டை செயலில் உள்ள விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – விடுபட்டவர்களுக்கும் உண்டு! அமைச்சர் அறிவிப்பு!

7. இதில் குடும்ப உறுப்பினர் பெயரை நீக்க ‘அட்டை பிறழ்வுகள்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து ‘புதிய கோரிக்கை’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

8. அதன்பின் குடும்ப அட்டை எண், குறியீடு எண் என்பதை சரிபார்த்து ‘சேவையை தேர்வு செய்யவும்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

9. இதில் ‘குடும்ப உறுப்பினர் நீக்க’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் குடும்ப உறுப்பினரை நீக்குவதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும்.

10. உதாரணமாக திருமணமாகி சென்ற மகள், உயிரிழந்த அப்பா உள்ளிட்டவற்றில் தங்களது காரணத்தை குறிப்பிட வேண்டும்.

11. அடுத்ததாக ‘ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும்’ என்பதை கிளிக் செய்து 1MB அளவில் கோப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

12. இறுதியாக `உறுதிப்படுத்துதல்’ என்பதை டிக் செய்து `பதிவு செய்ய’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து 2, 3 நாட்களுக்குள் பெயர் நீக்கம் செய்யப்பட்டு விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!