EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – UAN எண்ணை உருவாக்குவது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - UAN எண்ணை உருவாக்குவது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - UAN எண்ணை உருவாக்குவது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – UAN எண்ணை உருவாக்குவது எப்படி?

பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்று வரும் ஊழியர்கள் கட்டாயமாக UAN கணக்கு எண் வைத்திருக்க வேண்டும். தற்போது எப்படி UAN எண்ணை ஆன்லைன் மூலமாகவே உருவாக்குவது என்பதை காணலாம்.

UAN எண்:

பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக பயனடைந்து வரும் ஊழியர்களுக்கு EPFO யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியது. PF கணக்கைக் கொண்ட நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமே UAN கணக்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவே எளிதாக EPF உறுப்பினர்கள் UAN எண்ணை உருவாக்கி கொள்ளலாம். EPFO போர்ட்டல் மூலமாக எப்படி UAN எண்ணை உருவாக்கலாம் என்பதற்குரிய விளக்கத்தை இங்கு காணலாம்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) குறித்த முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

அதாவது முதலில் EPFO ன் அதிகாரபூர்வமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்கிற  இணையதள முகவரிக்கு சென்று அதில் உள்ள UAN ஒதுக்கீடு என்கிற பகுதியை கிளிக் செய்யவும். பின்பு, அதில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அதில் Captcha ஐ உள்ளிட்டு OTP ஐ உருவாக்கவும் என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்ட பிறகு OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்கிற பகுதியை கிளிக் செய்யவும்.

Exams Daily Mobile App Download

அதில் ஆம் என்கிற பகுதியை கிளிக் செய்து தனியார் நிறுவனம் அல்லது தொழிற்சாலைகளில் பணிபுரிகிறீர்களாக என்பதை தேர்வு செய்யவும். பின்பு PF குறியீட்டு விவரங்கள் அனைத்தையும் பதிவிட வேண்டும். அதில் சேரும் தேதியை உள்ளீட்டு அடையாளச் சான்று என்கிற பகுதியை கிளிக் செய்யவும். மேலும், அதில் அடையாளச் சான்று வகை நகலையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்பு, ஆதார் அல்லது மெய்நிகர் ஐடியை உள்ளீட்டு OTP ஐ உருவாக்கு என்கிற பகுதியை கிளிக் செய்து OTP எண்ணை பதிவிட்டதும் UAN எண்ணை உருவாக்கி விடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!