LIC பாலிசி உடன் பான் கார்டு இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

0
LIC பாலிசி உடன் பான் கார்டு இணைப்பு - எளிய வழிமுறைகள் இதோ!
LIC பாலிசி உடன் பான் கார்டு இணைப்பு - எளிய வழிமுறைகள் இதோ!
LIC பாலிசி உடன் பான் கார்டு இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

LIC வாடிக்கைதாரர்கள் அனைவரும் தங்கள் பாலிசியுடன் பான் கார்டை இணைப்பது அவசியம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

LIC பாலிசி:

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டு குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். இந்திய மக்களில் பலர் இந்நிறுவனத்தின் எண்டோமென்ட், முழுஆயுள், மணிபேக், டெர்ம் அஷ்யூரன்ஸ், பென்ஷன், யூலிப், மைக்ரோ மற்றும் உடல்நல திட்டங்கள் போன்றவைகளில் அதிக முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த பல ஊடகங்கள் வழியே, அவ்வப்போது தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை!

இந்நிலையில், மத்திய அரசு ஒரே தேசம் ஒரே அட்டை என்ற திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து ஆவணங்களும் ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பணப் பரிவர்த்தனை தொடர்பான அனைத்தையும் பான் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் LIC பாலிசி வாடிக்கையாளர்கள் தங்களின் பாலிசியுடன் ஆதார் அட்டையை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக LIC அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இணைய வழியிலேயே செய்யும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • LIC பாலிசியுடன் பான் கார்டு இணைக்கும் வழிமுறைகள்:
  • முதலில் வாடிக்கையாளர்கள் https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், பாலிசி செக்சனில் உள்ள Link PAN என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, Click Against The Declaration என்பதை தேர்வு செய்து, தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது கேட்கப்படும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு ‘Get OTP’ என்று கிளிக் செய்ய வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் OTP நம்பரைப் பதிவிட்டு Submit என்று கிளிக் செய்தால் பான்கார்டு இணைக்கப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!