ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டை நாம் எப்போதும் தேவையான மாற்றங்களை செய்து அப்டேட்டாக வைத்து கொள்ள மத்திய ஆதார் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆதாருடன் நமது மொபைல் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். அதற்கான எளிய வழிகளை இப்பதிவில் காண்போம்.

ஆதார் – மொபைல் எண் இணைப்பு:

இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக விளங்குகிறது. இந்த ஆதார் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து துறைகளிலும் ஆதார் எண் கேட்கிறார்கள். அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாகும். இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். அந்த வகையில் ஆதாரில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை UIDAI வழங்குகிறது. நாம் ஆன்லைன் வாயிலாகவும், அஞ்சல் நிலையம் மற்றும் ஆதார் சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரில் அப்டேட் செய்யலாம்.

தமிழகத்தில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – அமைச்சர் தகவல்!

மேலும், இந்த ஆதார் எண்னை நாம் வங்கி மற்றும் மொபைல் என்னுடன் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே நாம் எளிதாக எல்லா விவரங்களையும் மாற்றலாம். ஏனெனில் நீங்கள் ஆதாரில் பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை மாற்ற முற்படும் போது உங்களின் மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும். அதனை பதிவிட்டால் மட்டுமே ஆதாரில் திருத்தம் மேற்கொள்ள அடுத்த நிலை செல்ல முடியும். உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை நீங்கள் ஆதாரை அப்டேட் செய்ய முடியாது.

Exams Daily Mobile App Download

இந்த ஆதாருடன் மொபைல் எண் அப்டேட் செய்ய விரும்புபவர்கள் முதலில் https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆதார் சேவா கேந்திராவில் அப்பாயின்மெண்டை வாங்க வேண்டும். இதில் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப தேதியை தேர்வு செய்யலாம். பிறகு ஆதார் சேவா கேந்திராவை பார்வையிட்ட பிறகு, உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க ஆதார் திருத்தப் படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தப் படிவத்தில் உங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டிய மொபைல் எண் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். பின்னர் இந்த படிவத்தை ஆதார் சேவை மையத்தில் உள்ள அலுவலரிடம் கொடுக்கவும். இந்த படிவம் சரிபார்க்கப்பட்டு உங்கள் புதிய மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!