UAN – ஆதார் கார்டினை இணைக்கும் எளிய வழிமுறைகள் | PF காப்பீடு பெற ‘இது’ கட்டாயம்!

0
UAN - ஆதார் கார்டினை இணைக்கும் எளிய வழிமுறைகள் | PF காப்பீடு பெற 'இது' கட்டாயம்!
UAN - ஆதார் கார்டினை இணைக்கும் எளிய வழிமுறைகள் | PF காப்பீடு பெற 'இது' கட்டாயம்!
UAN – ஆதார் கார்டினை இணைக்கும் எளிய வழிமுறைகள் | PF காப்பீடு பெற ‘இது’ கட்டாயம்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான மூன்று வழிமுறைகளின் படிகள் குறித்து இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு:

ஊழியர்களின் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். மத்திய அரசும் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கும். அனைத்து ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுடனும், ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. புதிதாக திறக்கப்படும் கணக்குகள் ஆதார் மூலமாகவே தொடங்கப்படுவதால் புதிதாக இணைக்க தேவையில்லை. PF கணக்குடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மற்றும் நேரடியாக EMPLOYEES PROVIDENT FUND அலுவலகத்திலும் இணைக்கலாம்.

UMANG மொபைல் செயலி மூலம் ஆதார் பிஎஃப் கணக்குடன் இணைப்பதற்கான வழிகள்:
  • Google Play Store அல்லது Apple iOS வழியாக UMANG செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • UMANG செயலியில் பல்வேறு ஆன்லைன் சேவைகள் / வசதிகள் உள்ளது. அதில் EPFO இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், ‘eKYC சேவைகள்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது ‘Aadhaar Seeding’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இந்த பகுதியில் உங்கள் UAN எண்ணை உள்ளிட வேண்டும். அப்பொழுது UAN பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும்.
  • அங்கு, தேவையான ஆதார் அட்டை விவரங்களை பதிவு செய்து, OTP ஐ உள்ளிட்ட வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் ஆதார் உங்கள் UAN எண்ணுடன் இணைக்கப்பட்டு விடும்.
  • EPFO இணையதளத்தின் மூலம் PF கணக்குடன் ஆதார் இணைப்பதற்கான படிகள்:
  • முதலில், www.epfindia.gov.in என்ற EPFO அதிர்ப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இங்கு, ஆன்லைன் சேவைகள் பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
  • அங்கு, eKYC போர்டல் இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • ‘Link UAN Aadhaar’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். இப்பொழுது, UAN உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும்.
  • OTP சரிபார்க்கப்பட்ட பின்னர், உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்ட வேண்டும்.

தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை செயலர்!

  • மீண்டும், மற்றொரு OTP ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்களின் மொபைல்/மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
  • OTP சரிபார்ப்பிற்குப் பிறகு, UAN விவரங்கள் ஆதார் உடன் பொருந்தும் பட்சத்தில் இரண்டும் இணைக்கப்பட்டு விடும்.
  • ஆஃப்லைனில் EPF கணக்குடன் உங்கள் ஆதார் இணைக்கும் படிகள்:
  • நேரடியாக அலுவகத்திற்கு சென்று “Aadhaar Seeding Application” என்ற படிவத்தினை நிரப்ப வேண்டும்.
  • உங்கள் UAN மற்றும் ஆதார் விவரங்கள் மற்றும் தேவையான மற்ற விவரங்களை படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • படிவத்துடன் உங்கள் பான், ஆதார் மற்றும் யுஏஎன் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.
  • இந்த படிவத்தினை EPFO அல்லது பொது சேவை மையங்களின் (CSC) எந்த கள அலுவலகங்களிலும் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அங்கு, விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் ஆதார் உங்கள் EPF கணக்குடன் இணைக்கப்படும்.
  • ஆதார் மற்றும் யுஏஎன் இணைக்கப்பட்டவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உறுதி செய்வதற்கான செய்தி வரும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!