EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆன்லைனில் ஆதாரை இணைப்பது எப்படி?நவ.30 கடைசி நாள்!

0
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - ஆன்லைனில் ஆதாரை இணைப்பது எப்படி?நவ.30 கடைசி நாள்!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - ஆன்லைனில் ஆதாரை இணைப்பது எப்படி?நவ.30 கடைசி நாள்!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆன்லைனில் ஆதாரை இணைப்பது எப்படி?நவ.30 கடைசி நாள்!

EPF கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆதாரை அதனுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைப்பதற்கு நவ.30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ஆதாரை EPF கணக்குடன் இணைப்பதற்கான முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

EPF கணக்கில் ஆதார்:

தொழிலாளர் மற்றும் பணியாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊழியரும், நிறுவனமும் கணிசமான தொகையை இந்த வருங்கால வைப்புநிதி திட்டத்தில் பங்களிக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவராலும் PF கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு PF கணக்கு தொடர்ந்துள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

BSNL நிறுவனத்தின் 300 ரூபாய்க்கும் குறைந்த ரீசார்ஜ் திட்டங்கள் – 10 ஜிபி டேட்டா! முழு விபரம் இதோ!

இந்த திட்டம் வட்டி விகிதம் அதிகமாக கிடைப்பதாலும், வரிச்சலுகை கிடைப்பதாலும் பெரும்பாலான மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. எனினும் இந்த EPF கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கணக்குடன் தங்களது ஆதாரை இணைக்குமாறு EPFO தெரிவித்துள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் பணம் செலுத்தப்படாது என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதாரை EPF கணக்குடன் இணைப்பதற்கு கடந்த ஆகஸ்ட் 31 கடைசி நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் நாள் நீட்டிக்கப்பட்டு நவ.30ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. மேலும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளையோடு கடைசி தேதி முடிவடைய உள்ளது. இதுவரை ஆதாரை இணைக்காதவர்கள் உடனே இணைக்கும் வகையில் ஆன்லைன் மூலம் ஆதார் இணைக்கும் வழிமுறைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  • முதலில் EPFO நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ க்கு செல்ல வேண்டும்.
  • பின்னர் UAN நம்பர் மற்றும் Password கொடுத்து Login செய்ய வேண்டும்.
  • பின்னர் தோன்றும் பக்கத்தில் Manage மெனுவை க்ளிக் செய்து, அதில் தோன்றும் Aadhaar ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின் ஆதார் எண் மற்றும் பெயர் உள்ளிட்ட விபரத்தை பதிவிட்டு Save என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • உங்களது அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டு PF கணக்குடன் உங்களது ஆதார் எண் எளிதாக இணைக்கப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!