TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – சிறந்த முறையில் தயாராவது எப்படி?

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு - சிறந்த முறையில் தயாராவது எப்படி?
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – சிறந்த முறையில் தயாராவது எப்படி?

குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் எக்கச்சக்கமான விண்ணப்பதாரர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் எந்தெந்த பாடங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றிய சிறு குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பெரும்பாலும் குரூப்-4 தேர்வு எழுத்து தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில்தான் திறமையான தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். அதாவது முதல் பகுதியில் தமிழ் பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இரண்டாவது பகுதியில் இருந்து பொது அறிவு மற்றும் கணித பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். பெரும்பாலும் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகங்களை முழுமையாக படித்து விட்டாலே பெரும்பாலான கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்.

TNUSRB 3000+ போலீஸ் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

தற்போது எந்தெந்த பகுதிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதனைப் பார்க்கலாம். வரலாறு பகுதி என்று எடுத்துக்கொண்டால் 19 ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழகத்தில் நடந்த புரட்சிகள், தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம், காந்திய காலகட்டம், தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், காலனியத்திற்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும், சிந்து நாகரிகம், குப்தர்கள், அரேபியர், துருக்கியர்களின் வருகை, முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகர, பாமினி அரசுகள், தென்னிந்திய வரலாறு, ஐரோப்பியர்களின் வருகை, தமிழ் சமூகம், தமிழ்நாடு கலை மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இதனையடுத்து, குடிமையியல் பகுதிகளில் இந்திய அரசியலமைப்பு, மாநில அரசு, மத்திய அரசு, அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, தேர்தல் அரசியல் கட்சிகள், மனித உரிமைகள், அரசாங்களின் வகைகள், உள்ளாட்சி அமைப்புகள், தேசிய சின்னங்கள், பெண்கள் மேம்பாடு, நீதித்துறை, லோக்பால், லோக் ஆயுக்தா பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புவியியல் பகுதிககளில் இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம், இந்தியா காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள், வேளாண்மை கூறுகள், வளங்கள் மற்றும் தொழிலங்கள், மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு, தமிழ்நாட்டு இயற்கை பிரிவுகள், மானுடவியல், நிலக்கோளம், வளிமண்டலம், சுற்றுச்சூழல் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

பொருளாதாரம் என்று எடுத்துக்கொண்டால் இந்திய பொருளாதாரம், பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும், ஊரகப் பொருளாதாரம், தமிழ்நாடு பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகமயமாதல், உணவு பாதுகாப்பு, அரசாங்கமும் வரிகளும் ஆகிய பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் தொடர்பான பகுதிகளுக்கு சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமூக மேம்பாடு, தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள், தமிழ்நாடு புவியியல் மற்றும் பொருளாதாரம் மற்றும் அவற்றின் தாக்கங்கள் ஆகிய பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள சிறுசிறு பாடத்திட்டங்களை தெளிவாக படித்து விட்டாலே அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்து விடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!