EPFO அக்கவுண்ட் பேலன்சை அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
EPFO அக்கவுண்ட் பேலன்சை அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
EPFO அக்கவுண்ட் பேலன்சை அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
EPFO அக்கவுண்ட் பேலன்சை அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தனது வாடிக்கையாளர்கள் PF கணக்கில் உள்ள இருப்பு தொகையை எளிதாக அறிந்து கொள்ளும் வழிமுறைகளை வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

EPFO கணக்கு:

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தின் போது அவர்களின் மாதாந்திர ஊழியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையும், நிறுவனம் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையும் செலுத்துகிறது. இந்த தொகையானது ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் தங்கள் பணிக்காலம் முடியும் போது அல்லது பணியில் இருந்து விலகும் போது அந்த வைப்பு தொகையை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பயனருக்கும் தனிப்பட்ட UAN எண் கொடுக்கப்பட்டிருக்கும்.

சென்னை: மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! இன்றைய நிலவரம்!

ஊழியர்களின் குடும்பத்தில் ஏதேனும் அவசர தேவை இருப்பின், வைப்பு தொகையில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். EPFO உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கின் இருப்புத் தொகையை அறிந்து கொள்ளும் வகையில், பல சேவைகளை EPFO வழங்குகிறது. இது குறித்த தகவல்களை EPFO தனது ட்விட்டர் கணக்கில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி, PF உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFO இன் இலவச எண்ணான 011-22901406 ஐ அழைப்பதன் மூலம் உங்கள் PIF இருப்பை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்திற்கு நவ.29 வரை ரெட் அலர்ட், 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை எச்சரிக்கை!

இதேபோல் மொபைலின் SMS மூலமாகவும் PF கணக்கில் இருப்பில் இருக்கும் தொகையை அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு, EPFOHO <UAN> <LAN> என்று பதிவு செய்து 7738299899 என்ற எண்ணிற்கு செய்தி அனுப்ப வேண்டும். இந்த LAN இடத்தில் நீங்கள் பெற விரும்பும் செய்தி எந்த மொழியில் இருக்க வேண்டும் என்று பதிவு செய்ய வேண்டும். அதாவது, நீங்கள் இப்போது ஆங்கிலத்தில் செய்தியைப் பெற விரும்பினால், UAN எண்ணைத் தொடர்ந்து ENG ஐ உள்ளிட வேண்டும். மேலும், இந்த அனைத்து செயல்முறைகளையும் நீங்கள் EPFO இல் பதிவு செய்த அதே தொலைபேசி எண்ணில் இருந்து மட்டுமே செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!