தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் கவனத்திற்கு – அரசு வழங்கும் உதவித்தொகை! பெறுவது எப்படி?

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் கவனத்திற்கு - அரசு வழங்கும் உதவித்தொகை! பெறுவது எப்படி?
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் கவனத்திற்கு - அரசு வழங்கும் உதவித்தொகை! பெறுவது எப்படி?
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் கவனத்திற்கு – அரசு வழங்கும் உதவித்தொகை! பெறுவது எப்படி?

தமிழக அரசு படித்த மற்றும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. இது குறித்த விவரங்களை கரூர் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ளார்.

அரசு உதவித்தொகை:

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதை தொடர்ந்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதனை தொடர்ந்து புதுப்பித்திருப்பதும் அவசியமாகும். வயது வரம்பு மற்றும் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு – கொரோனா வழிகாட்டுதல்கள் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு பூர்த்தியான மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு வழங்கும் இந்த உதவித்தொகை பெற தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு – அறிவிப்பு வெளியீடு!

சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து பத்தாண்டுகள் மட்டும் வழங்கப்படும் என்றும், இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கரூர் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here