ஒட்டுமொத்த குடும்பத்திற்கு ஒரே மொபைல் நம்பரில் ஆதார் கார்டு எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஒட்டுமொத்த குடும்பத்திற்கு ஒரே மொபைல் நம்பரில் ஆதார் கார்டு எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஒட்டுமொத்த குடும்பத்திற்கு ஒரே மொபைல் நம்பரில் ஆதார் கார்டு எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஒட்டுமொத்த குடும்பத்திற்கு ஒரே மொபைல் நம்பரில் ஆதார் கார்டு எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் அட்டையின் பயன்பாடு அனைத்து இடங்களிலும் உள்ளன. இந்த வகையில் தற்போது குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒரே மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஆதார் அட்டையை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஆதார் அட்டையை எளிமையான வழிமுறைகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எளிய வழிமுறைகள் :

இந்தியா முழுவதும் ஆதார் அட்டை முக்கிய முதல் ஆவணமாக உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆதார் அட்டை அனைவருக்கும் முக்கிய ஆவணமாகவும், மேலும் ஆதார் அட்டையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வகையில் வங்கி கணக்கு மற்றும் பான் அட்டையில் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 861 காலிப்பணியிடங்களுக்கான UPSC தேர்வு – பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

மேலும் அனைத்து அரசு வேலைகளுக்கு இந்த ஆதார் அட்டை அவசியமாகும். இந்த வகையில் ஆதார் பிவிசி கார்டை UIDAI தளத்தில் ஆர்டர் செய்திட, பதிவு செய்த மொபைல் எண் தேவையில்லை. மேலும் எந்தவொரு மொபைல் எண்ணை பயன்படுத்தி, ஓடிபி வெரிபிகேஷன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆதார் பிவிசி கார்டை எளிமையான முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1.முதலில் uidai.gov.in அல்லது resident.uidai.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.அதில் get aadhar என்ற ஆப்சனில், oarder aadhaar PVC card என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

2.அதில், Order Aadhar Pvc card கிளிக் செய்ய வேண்டும்.பின்பு 12 டிஜிட் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். தொடர்ந்து, Captcha verification செய்ய வேண்டும்.

3.தொடர்ந்து பதிவு செய்த மொபைல் எண் இருந்தால் Send Otp கொடுக்கலாம். இல்லையெனில், my mobile number is not registered என்ற பாக்ஸினை கிளிக் செய்து, கையில் வைத்திருக்கும் மொபைலின் நம்பரை பதிவிட வேண்டும்.

4.இப்போது மொபைல் எண்ணுக்கு OTP வரும். OTP யை கொடுத்து டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்சை கிளிக் செய்துவிட்டு, சம்பிட் ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.

5.இறுதியாக, Make Payment ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும். மேலும் பணம் செலுத்துவதற்கான தளத்திற்கு மாற்றப்படுவார்கள்.

6.அதில் கார்டு (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம், அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ, யுபிஐ ஐடி மூலமாகவோ பணம் செலுத்திக் கொள்ளலாம்.

7.பேமெண்ட் கன்பார்ம் ஆனதும், உங்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் ரசீது வரும். அதனையும் டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், மொபைலுக்கு மெசேஜில் உங்கள் Service Request Number-வும் வரும். அதனை உபயோகித்து, உங்களது ஆர்டர் ஸ்டேட்ஸை செக் செய்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!