ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தொலைந்து விட்டால் புதிய அட்டையை பெறுவது எப்படி?

0
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - தொலைந்து விட்டால் புதிய அட்டையை பெறுவது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - தொலைந்து விட்டால் புதிய அட்டையை பெறுவது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தொலைந்து விட்டால் புதிய அட்டையை பெறுவது எப்படி?

இந்தியாவில் தனி மனிதனின் அடையாள ஆவணங்களுள் ஒன்று ஆதார் கார்டு. இந்த ஆதார் கார்டை எதிர்பாராத விதமாக தொலைத்து விட்டால் அதனை சுலபமான முறையில் திரும்ப பெற முடியும். அதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டு

இந்தியாவில் வருமான வரி, வங்கி சேவை, இன்சூரன்ஸ் சேவை உள்ளிட்ட பல இடங்களில் ஆதார் கார்டை பயன்படுத்தி பெற முடிகிறது. அத்துடன் சிலிண்டர் வாங்குவது, தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கும் ஆதார் கார்டை வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. தற்போது இந்த ஆதார் கார்டை எதிர்பாராத சூழ்நிலையில் தொலைத்து விட்டால் மீண்டும் புதிய ஆதார் கார்டை தற்போது சுலபமாக பெற முடியும். இதற்கு ஆதார் எண் அல்லது பதிவு ஐடி அல்லது விர்ச்சுவல் ஐடி உள்ளிட்ட தகவல்கள் தேவைப்படுகிறது.

‘IPL ஐ விட்டுவிட்டு ஆட்டோ ஓட்ட போங்க’ – RCB வீரர் முகமது சிராஜை சாடிய ரசிகர்கள்!

அத்துடன் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி உள்ளிட்ட விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் குறிப்பாக ஆதார் எண் தெரிந்து  இருந்தால் https://eaadhaar.uidai.gov.in/#/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தங்களது ஆதார் கார்டை பெற முடியும்.  இந்த இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்றால் https://eaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.  அத்துடன் ஆதார் எண் இல்லாத சூழலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் E-mail ID வைத்திருப்பவர்கள் https://resident.uidai.gov.in/lost-uideid என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.

தற்போது புதிய ஆதார் கார்டை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. முதலாவதாக https://uidai.gov.in அல்லது https://resident.uidai.gov.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

2. ஆதார் அட்டையை ஆர்டர் செய்ய வேண்டும் என்பதால் “ஆர்டர் ஆதார் கார்டு” என்ற பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

3. தற்போது 12 இலக்க தனித்துவ அடையாள எண் (UID), 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் (VID) அல்லது 28 இலக்க பதிவு எண்ணை உள்ளிட வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

4. இதையடுத்து பாதுகாப்புக் குறியீட்டை நிரப்பி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையென்றால், பதிவு செய்யப்படாத / மாற்று மொபைல் எண் தேவை என்ற தேர்வு பெட்டியைக் கிளிக் செய்ய வேண்டும்.

5. இப்போது OTP எண் அனுப்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6. இதையடுத்து கீழ் காண்பிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

7. இப்போது OTP சரிபார்க்கப்பட்டு சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

8. இறுதியாக ‘பணம் செலுத்து’ என்பதை கிளிக் செய்து கட்டணத்தை செலுத்த வேண்டும். இப்போது தங்களது ஆதார் கார்டு PDF முறையில் கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!