TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – 180+ வினாக்களுக்கு பதில் அளிக்கும் எளிய வழிமுறைகள் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - 180+ வினாக்களுக்கு பதில் அளிக்கும் எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - 180+ வினாக்களுக்கு பதில் அளிக்கும் எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – 180+ வினாக்களுக்கு பதில் அளிக்கும் எளிய வழிமுறைகள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்த இருக்கும் குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளை எழுத தயாராகி வருபவர்கள் இப்போது 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிப்பது எப்படி என்ற விவரங்களை இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

குரூப் 4 தேர்வு:

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் 7382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகளை எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பங்களை செலுத்தியுள்ளனர். அந்த வகையில் வரும் ஜூலை 24ம் தேதியன்று நடைபெற இருக்கும் குரூப் 4 தேர்வுக்கான போட்டிகள் அதிகரித்துள்ளதால் இப்போது தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளித்து எப்படி தேர்ச்சி பெறுவது என்ற விவரங்களை அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இந்த குரூப் 4 தேர்வு எழுத்து தேர்வை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி காத்திருக்க தேவையில்லை! புதிய திட்டம் அறிமுகம்!

இந்த எழுத்துத் தேர்வு தமிழ் மொழித் தகுதி தேர்வு மற்றும் பொது அறிவு என்ற பிரிவில் இருந்து இரு பகுதிகளாக கேட்கப்படும். இதில் தமிழ் பாடப்பிரிவில் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். அந்த வகையில் தமிழில் கேட்கப்படும் 100 வினாக்களில் 50% மதிப்பெண்களை எடுப்பதற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். கூடுதலாக 11 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களையும் மேற்பார்வையிட்டு கொள்வது நல்லது.

இந்த பிரிவில் செய்யுள், உரைநடை, இலக்கணம், நூற்குறிப்பு, நூலாசிரியர் குறிப்பு, நூலாசிரியர் எழுதிய பிற நூல்கள், காலம் போன்ற அனைத்து தகவல்களையும் முழுவதுமாக கற்றுத் தேற வேண்டும். தவிர 90 முதல் 95% வினாக்கள் 6 முதல் 10ம் வகுப்பு புத்தகங்களில் இருந்து கேட்கப்படும் என்பதால் அதை நன்றாக படித்து கொள்ள வேண்டும். இதற்கு அடுத்தபடியாக கணித பகுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விகிதம், லாபம் நஷ்டம், அளவீடுகள், சதவீதம், வட்டி கணக்குகள், இயற்கணிதம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த பகுதிகளை முழுமையாக படிக்கும் போது மொத்தமாக 125 வினாக்களில் 115 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்கும் வாய்ப்பு கிட்டும். தொடர்ந்து, பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும் 100 வினாக்களில் 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வுகளும் கேட்கப்படும். இந்த பிரிவில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற கேள்விகள் கொள்குறி வகையில் கேட்கப்படும்.

Exams Daily Mobile App Download

இப்போது அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், புவியியல், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதில் புவியியல் பாடப்பிரிவில் இந்திய வரைபடத்துடன் இடங்களை பொருத்தி படித்துக் கொள்வது நல்லது. மேலும் அரசியலமைப்பு பிரிவில் பகுதிகள், அட்டவணைகள், ஆர்டிக்கிள், சட்டத்திருத்தம், ஆங்கிலேயர் கால சட்டங்கள், அரசியலமைப்பு ஆகியவை கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து நடப்பு நிகழ்வுகளுக்கு தினசரி செய்தித்தாள்களை கவனமாக படிக்க வேண்டும். இப்படி செய்தால் எளிதாக குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!