EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – UAN எண்ணை அறிந்துகொள்வது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - UAN எண்ணை அறிந்துகொள்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - UAN எண்ணை அறிந்துகொள்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – UAN எண்ணை அறிந்துகொள்வது எப்படி?

உறுப்பினர் ஐடியை யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் இணைக்க UAN எண் வழங்கப்படுகிறது. தற்போது EPF உறுப்பினர்கள் தங்களது UAN எண்ணை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO கணக்கு:

பிஎஃப் கணக்கு என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்படும் வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். இதில் பணியாளர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12% மற்றும் அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்துவார்கள். இந்தத் தொகைக்கு வட்டி விகிதமும் கொடுக்கப்படும் மற்றும் வரி சலுகையும் கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வூதிய நிதியை பெற்று வருகின்றனர். அவ்வப்போது இந்த பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் அறிவிக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் – அகவிலைப்படி நிலுவைத்தொகை கிடையாது!

உறுப்பினர் அடையாள எண்களை (உறுப்பினர் ஐடி) ஒற்றை யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் இணைக்க UAN எண் வழங்கப்படுகிறது. அதாவது UAN யுனிவர்சல் கணக்கு எண் என்பது 12 இலக்க பிரத்யேக எண்ணாகும். இது ஒரு தனிநபரின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்படியான நிரந்தர எண்ணாகும். மேலும், ஒரு வாடிக்கையாளர் புதிய நிறுவனத்தில் சேரும்போது தங்களது உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) வழங்க வேண்டும். EPF உறுப்பினர்கள் தங்களது UAN எண்ணை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

UAN எண்ணை அறிந்துகொள்ள முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்கிற  அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். Important Links என்கிற பகுதிக்கு சென்று Know your UAN ஐ கிளிக் செய்யவும். பிறகு உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்து captcha code யும் பதிவு செய்யவும். பின்பு, Request OTP பகுதியை கிளிக் செய்தால் உங்களது மொபைல் எண்ணுக்கு OTP செல்லும். அதையும் பதிவு செய்த பிறகு Submit பட்டனை அழுத்தவும். அடுத்த பக்கத்தில் உங்களது முழு பெயரையும், பிறந்த தேதியையும் உள்ளிடவும். பின்பு, ஆதார் நம்பர் அல்லது பான் நம்பரை சேர்க்கவும். Submit பட்டனை கிளிக் செய்தால் மீண்டும் captcha code காட்டப்படும். பின்பு, உங்களது மொபைல் போனில் UAN எண் காண்பிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!