ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை இதோ!

0
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை இதோ!
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை இதோ!

மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமான ரேஷன் கார்டில், புதிய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்க விரும்புபவர்களுக்கு தற்போது ஆன்லைன் மூலம் சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

புதிய உறுப்பினர்

மத்திய அரசின் பொது விநியோகத்துறையின் கீழ் வழங்கப்பட்டு வரும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு பயனர்களுக்கு ரேஷன் கார்டுகள் அவசியமானது. இந்த ரேஷன் கார்டுகள் மூலம் தான் பயனர்கள் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் முதலியவற்றை மிக குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். பொதுவாக ரேஷன் கார்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர ரேஷன் கார்டுகள் மூலம் தான் அரசாங்கம் வழங்கும் சில நலத்திட்ட உதவிகளும் மக்களை சென்று சேருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? கணக்கீடு விவரங்கள் வெளியீடு!

இந்த ரேஷன் கார்டுகள் தற்போது ஆதார் அட்டையைப் போலவே அத்தியாவசிய ஆவணமாக மாறி இருக்கிறது. பொதுவாக ஒரு ரேஷன் கார்டில் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். இப்போது ஒரு நபரது குடும்பம் வளரும் போது குழந்தைகள், மனைவி போன்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். அப்போது தான் ரேஷன் கடைகள் மூலம் கிடைக்கும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். இந்த சேவைகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மூலம் எளிதாக்கப்பட்டு இருக்கிறது. முதலாவது ரேஷன் கார்டுகளில் புதிய நபர்களை இணைக்க சில ஆவணங்கள் தேவைப்படும்.

அந்த வகையில் குழந்தைகளின் பெயர்களைச் சேர்க்கும்போது:
  • குடும்பத் தலைவரின் புகைப்பட நகலுடன் அசல் ரேஷன் கார்டு
  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
  • பெற்றோரின் ஆதார் அட்டை ஆகியவை அவசியம்.
புதிதாக திருமணமானவரின் பெயரைச் சேர்க்கும்போது:
  • புதிய குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை
  • திருமண சான்றிதழ்
  • புதிய உறுப்பினரின் பெற்றோரின் ரேஷன் கார்டு
ஆன்லைனில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்க:
  • உங்கள் மாநிலத்தின் உணவு விநியோகத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்
    உள்நுழைவு IDயை உருவாக்கவும்.
  • அல்லது உங்களிடம் ஏற்கனவே ID இருந்தால் அதனை வைத்து உள்நுழையவும்
  • புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கான விருப்பம் முகப்புப் பக்கத்தில் தோன்றும்
    அதை கிளிக் செய்யவும்
  • ஒரு புதிய படிவம் தோன்றும்
  • உங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினர் பற்றிய அனைத்து தகவல்களையும் நிரப்பவும்
  • தேவையான ஆவணங்களின் நகலை பதிவேற்றவும்
  • படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு உங்கள் படிவத்தைக் கண்காணிக்க பதிவு எண்ணைப் பெறுவீர்கள்
  • இப்போது ரேஷன் கார்டு தபால் மூலம் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!