ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மாஸ்க்டு கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - மாஸ்க்டு கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - மாஸ்க்டு கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மாஸ்க்டு கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தனிநபரின் முக்கிய அடையாள அட்டையாக விளங்கிவரும் ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விரும்பினால் கண்டிப்பாக மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது எப்படி மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரை பதிவிறக்கம் செய்வது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் செய்யப்பட்ட ஆதார்

இந்திய குடிமக்கள் என்பதற்கு முக்கிய ஆதாரமாக ஆதார் அட்டை தான் விளங்கிவருகிறது. வங்கி கணக்கு தொடங்குதல், அரசாங்க திட்டத்தில் முதலீடு செய்தல் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கிய அங்கமாக விளங்கி வருகிறது. மேலும், இந்த ஆதார் கார்டினை கவனமாக பயன்படுத்த வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் அட்டைதாரரை பற்றிய முழு தகவல்களையும் கொண்டுள்ளது.

TN 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ஆதாரத்தை பாதுகாப்பதற்காக முகமூடி செய்யப்பட்ட ஆதார் அமைப்பு என்கிற ஒரு திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகமூடி செய்யப்பட்ட ஆதார் திட்டத்தின் மூலமாக தனிநபரின் தனிப்பட்ட தகவலை வெளிப்படுத்தாமல் பகிர்ந்து கொள்ளலாம். ஆதார் எண்ணை வெளிப்படுத்த முடியாத பட்சத்தில் இந்த முகமூடி செய்யப்பட்ட ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரைப் பெற https://myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் திட்டத்தை பெற முதலில் https://eaadhaar.uidai.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்பு, எனக்கு முகமூடி அணிந்த ஆதார் வேண்டும் என்கிற பகுதியை கிளிக் செய்து கேப்ட்சா சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட வேண்டும். பின்னர் ஓடிபி அனுப்பு என்கிற பகுதியை கிளிக் செய்து இ-ஆதார் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் OTP ஐ உள்ளிட்டுPDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!