ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் போனில் டவுன்லோட் செய்வது எப்படி?

0
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் போனில் டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் போனில் டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் போனில் டவுன்லோட் செய்வது எப்படி?

இந்திய நாட்டின் மக்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஆவணமாக உள்ள ஆதார் அட்டையை நமது மொபைல் போன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியை UIDAI அளித்துள்ளது. இதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் பதிவிறக்கம்:

இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசியமான சான்றாகும். அடையாள ஆணையத்தால் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க தனித்துவமான எண் வழங்கப்பட்டிருக்கும். அரசின் அனைத்து அலுவலகம் மற்றும் திட்டங்களிலும் ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையில் நபரின் கைரேகை, கருவிழி படம், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நமது ரேஷன் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி விவரங்கள் அனைத்துடனும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

தற்போது UIDAI தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் புதிதாக ஒரு புதுப்பிப்பை செய்துள்ளது. அதன்படி, நமது ஆதார் அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் ஏதோ ஒரு சூழ்நிலையில், நமது ஆதார் அட்டையை மறந்து விட்டு சென்றிருக்கும் சமயங்களில் நமது மொபைல் போன் மூலமாக எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த அறிவிப்பில், பயனர்கள் “முழுமையான ஆதார் எண்ணைக் காட்டும் ‘ரெகுலர் ஆதார்’ அல்லது கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் காட்டும் ‘மாஸ்க்டு ஆதார்’ ஆகியவற்றில் எது வேண்டுமோ அதை பதிவிறக்கம் செய்ய அனுமதி அளிப்பதாக கூறியுள்ளது.

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • முதலில் UIDAI ன் அதிகாரப்பூர்வ இணையதளமான  eaadhaar.uidai.gov.in க்கு செல்ல வேண்டும்.
  • அதில், Download Electronic Copy of Your Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இந்த பகுதியில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • மாஸ்க்டு ஆதார் அட்டைக்கு, I want a Masked Aadhaar என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

திண்டுக்கலில் டிச.19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 5ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை!

  • Send OTP என்பதை கிளிக் செய்து, வரும் OTP எண்ணை உள்ளிட்டு submit என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது ‘Download Aadhaar’ என்பதை தேர்வு செய்து உங்கள் ஆதாரின் PDF வகையை பெறலாம்.
  • இப்பொழுது உங்கள் கடவுச்சொல்லை பயன்படுத்தி உங்கள் ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  • உங்களுக்கு தேவைப்படும் சமயங்களில் உங்கள் ஆதாரின் PDFஐ பயன்படுத்திக் கொள்ளலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக, மாஸ்க்டு ஆதார் உங்கள் ஆதார் எண்ணின் முதல் எட்டு இலக்கங்களை மறைவாக வைத்திருக்கிறது.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!