ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி?

0
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் எண் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் எண் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி?

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை ஆதாரை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் கார்டை மொபைல் எண் இல்லாமல் எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் ஒரு தனி மனிதனின் அத்தியாவசிய ஆவணங்களில் ஆதார் கார்டு ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் தனியாக ஒரு ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. ஆதார் கார்டில் தனிநபர் விவரங்களான பெயர், பாலினம், வயது, புகைப்படம், முகவரி, தொலைபேசி எண், பயோமெட்ரிக் என அனைத்தும் அடங்கியிருக்கும். ஆதாரை பான் கார்டு, ரேஷன் கார்டு, சிம் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பேங்க் பாஸ் புக் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு!

வங்கி கணக்கு தொடங்குவது, ஓட்டுநர் உரிமத்தை பெறவும் மற்றும் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, கோவிலுக்கு செல்ல மற்றும் மொபைல் வாங்க, சிம் கார்டு பெற போன்ற பெரும்பாலான சேவைகளைப் பெற ஆதார் அட்டை பயன்படுகிறது. இந்நிலையில் ஆதார் கார்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன் பதிவு செய்யாதவர்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆதார் கார்டில் மொபைல் எண் இல்லாமல் எவ்வாறு அதனை பதிவிறக்கம் செய்வது குறித்த விவரங்களை பார்ப்போம்.

முதலில் UIDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்துக்குச் சென்று ‘My Aadhaar’ என்பதை கிளிக் செய்து கொள்ளவும். பின்னர், ‘Order Aadhar PVC Card’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதில் 12 இலக்க ஆதார் நம்பரை உள்ளிட வேண்டும். அதன்பின், ஆதார் எண்ணுக்கு பதிலாக 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணையும் (VID) நீங்கள் உள்ளிடலாம். அதற்கு பின்னர், உங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அல்லது கேப்ட்சா குறியீடு உள்ளிட வேண்டும். பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் கார்டை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் ‘My mobile number is not registered’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

Exams Daily Mobile App Download

இப்போது உங்கள் மாற்று எண் அல்லது பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணை உள்ளிடவும். உடனே நீங்கள் உள்ளிட்ட மாற்று எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். கடைசியாக ‘Terms and Conditions’ என்ற வசதியை கிளிக் செய்து, இறுதியாக ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு செல்வீர்கள். அதன் பின்னர், ஆதார் கடிதத்தின் முன்னோட்டம் என்ற விருப்பத்தை காண்பீர்கள். பிறகு ‘பணம் செலுத்து’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்த வேண்டும். உடனே, நீங்கள் உங்களுடைய ஆதார் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!