PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

0
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

EPFO அமைப்பில் பங்களிப்பு செலுத்தி வரும் ஒவ்வொரு ஊழியர்களும், கணக்கின் இருப்பு விவரங்களை அறிந்து கொள்ள சில ஆன்லைன் வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

பேலன்ஸ் சரிபார்ப்பு

பொதுவாக, மாத ஊதியம் பெறும் ஒவ்வொரு ஊழியர்களும் தங்களது பணத்தை சேமிக்கும் சிறந்த திட்டமாக EPFOவை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் மாதந்தோறும் அடிப்படை சம்பளத்தில் 12 சதவிகிதத்தை PFல் பங்களிப்பு செய்ய வேண்டும். இதே அளவு தொகையை ஒவ்வொரு முதலாளியும் செலுத்த வேண்டும். இந்த தொகை ஊழியர்களுக்கு ஒரு நிலையான வருங்காலத்தை அமைக்க உதவுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், PF வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் EPFO ஆல் அறிவிக்கப்படுகிறது.

PF பென்ஷன் தொகை அதிகரிப்பு? அரசு எடுக்கும் முக்கிய முடிவு!

அந்த வகையில் ஊழியர்கள் தங்கள் EPF கணக்குகளில் ஏற்றப்பட்டுள்ள வட்டியின் இருப்பை தெரிந்துகொள்ள சில ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிமுறைகளை பின்பற்றலாம். இதற்கான 4 எளிய வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

SMS மூலம் பேலன்ஸ் சரிபார்க்க:

உங்கள் PF இருப்பை SMS மூலம் சரிபார்க்க “EPFOHO UAN ENG” என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் போதும். அதன் பிறகு கடைசி PF பங்களிப்பு மற்றும் மொத்த PF இருப்புடன் SMS ஒன்றைப் பெறுவீர்கள். இப்போது, யுஏஎன் வழங்காமல் அல்லது இணையச் சேவை இல்லாத பட்சத்தில் பிஎஃப் இருப்பை சரிபார்க்கவும் இந்த முறை உதவும். இருப்பினும், சந்தாதாரர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்பதை உறுதி செய்யவும்.

EPFO இணையதளம் மூலம் சரிபார்க்க:

  • EPFO இணையதளம் வழியாக PF இருப்பைச் சரிபார்க்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • அங்கு ஊழியர் பிரிவின் கீழ் உள்ள ‘உறுப்பினர் பாஸ்புக்’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழையவும்

  • அதன்பிறகு நீங்கள் பெற்ற பிஎஃப் வட்டியுடன் பிஎஃப் பாஸ்புக்கை காண்பீர்கள்.
  • உங்களின் UAN உடன் ஒன்றுக்கும் மேற்பட்ட PF கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால்,
  • அந்தக் கணக்குகளுக்கான விவரங்களையும் நீங்கள் பார்க்க முடியும்.
  • இருப்பைச் சரிபார்க்க, நீங்கள் குறிப்பிட்ட உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும்.

உமாங் ஆப் மூலம் PF இருப்பை சரிபார்க்க:

  • UMANG பயன்பாட்டில் உங்கள் PF இருப்பைச் சரிபார்க்க நீங்கள் Play Store அல்லது App Store லிருந்து அந்த பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும்.
  • இதில் உரிமைகோரல் நிலை, உங்கள் வாடிக்கையாளரின் (KYC) நிலையை அறிதல் போன்ற EPF விவரங்களை நீங்கள் சரிபார்க்கலாம்.
மிஸ்டு கால் மூலம் PF இருப்பை சரிபார்க்க:
  • மிஸ்டு கால் முறையின் மூலம் பேலன்ஸைச் சரிபார்க்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட
  • தொலைபேசி எண்ணிலிருந்து EPFO வழங்கிய எண்: 011-22901406க்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • இந்த முறை முற்றிலும் இலவசமானது.
  • மேலும் ஸ்மார்ட்போன் அல்லாத பயனர்களும் இதைப் பயன்படுத்தலாம்.
  • இந்த முறையில் பயனர்கள் தங்கள் UAN ஐ கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
  • உங்கள் வங்கிக் கணக்கு, ஆதார் எண் மற்றும் பான் எண்ணுடன் உங்கள் தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்தால் மட்டுமே போதும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!