PAN Card இல் ஆன்லைன் மூலம் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
PAN Card இல் ஆன்லைன் மூலம் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PAN Card இல் ஆன்லைன் மூலம் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PAN Card இல் ஆன்லைன் மூலம் போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அனைவருக்கும் பண பரிவர்த்தனை மற்றும் வருமானவரி தொடர்பான அனைத்து பணிகளுக்கும் PAN கார்டு அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. அத்தகைய பான் கார்டில் சமீபத்தில் எடுத்த போட்டோவை ஆன்லைன் மூலம் எளிமையான முறையில் மாற்றிக் கொள்ளலாம். அது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

PAN Card போட்டோ மாற்றம்:

PAN கார்டு என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க தனித்துவமான எண் கொண்ட ஒரு ஆவணமாகும். இந்த பான் கார்டு வரி செலுத்துதல், டிடிஎஸ், டிசிஎஸ் வரவு, வருமானம் என பல்வேறு பண பரிவர்த்தனைகளை கவனிக்க உதவுகிறது. இந்த PAN கார்டு அனைத்து வங்கிகளாலும் கேட்கப்படும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. வங்கிகளில் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் அதாவது அஞ்சல், தனியார் நிறுவனங்கள், பணி செய்யும் நிறுவனங்கள் என அனைத்திலும் முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது.

PF கணக்கில் இருந்து முன்கூட்டியே பணத்தை பெறும் விதிகள் – EPFO பயனர்கள் கவனத்திற்கு!

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் போட்டோ தவறாக இருந்தாலோ, மிகவும் பழைய போட்டோ இருந்தாலோ அதனை மாற்றிக் கொள்ள முடியும். அவ்வாறு போட்டோ மாற்றம் செய்யும் பணியை ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாம். இது குறித்த முழு விபரங்களை பின்வருமாறு காணலாம்.

PAN Card ல் போட்டோ மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்:

1. முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற NSDL ன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. பின்னர் தோன்றும் பக்கத்தில் Changes or correction in existing PAN Data என்ற மெனுவை தேர்வு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

3. பின்னர் KYC ஆப்ஷனை தேர்வு செய்து அதில் Photo Mismatch ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதேபோல் Signature Mismatch ஆப்ஷனை தேர்வு செய்து கையொப்பத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.

4. அதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்து Next பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

5. அதனை தொடர்ந்து அடையாளம், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றுக்கு சான்று வழங்கி சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 101 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

6. கட்டணம் செலுத்திய பிறகு 15 இலக்க acknowledge number அனுப்பப்படும். அதன்பின் விண்ணப்பத்தை print out எடுத்து வருமான வரித் துறையின் PAN சேவை பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

7. அதன் பின்னர் தான் உங்களது பான் கார்டில் போட்டோ மாற்றப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!