ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதாரில் அனைத்து விவரங்களும் அப்டேட்டாக இருக்க வேண்டியது அவசியமாகும். தற்போது ஆதாரில் புகைப்படம் மாற்றும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் ஆதார் கார்டு தனி நபரின் அடையாளமாக விளங்கி வருகிறது. தற்போது பள்ளி, கல்லூரிகளில் உதவித்தொகை பெறுவதற்கு கேஸ் இணைப்பு பெறுவது போன்ற தனிப்பட்ட வேலைகளுக்கும், அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் ஆதார் கார்டு அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். அந்த வகையில் ஆதாரில் புகைப்படம், முகவரி & தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை UIDAI வழங்குகிறது.

மீண்டும் தீவிரமடையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? புதிய பாதிப்புகள் எதிரொலி!

ஆன்லைன், அஞ்சல் நிலையம் வாயிலாகவும் விவரங்களை மாற்றலாம். தற்போது புதிய ஆதார் கார்டையும் ஆன்லைன் மூலம் பெறலாம். இன்னும் எளிதாக்கும் வகையில் தபால் காரர்கள் மூலமாக வீட்டிற்கே வந்து குழந்தைக்கு ஆதார் எடுக்கும் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படம் மாற்றுவதற்கு ஆதார் மையம் செல்வது அவசியமாகும். அருகில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு செல்ல நேரடியாகவோ, ஆன்லைனிலோ அப்பாய்ண்ட்மெண்ட் வாங்க வேண்டும். அப்போது மட்டுமே ஆதாரில் புகைப்படத்தை மாற்ற முடியும்.

புகைப்படம் மாற்றும் வழிமுறைகள் இதோ:

  • https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆதார் சேவை மையத்துக்கான அப்பாய்ண்ட்மெண்ட் பதிவு செய்ய வேண்டும்.
Exams Daily Mobile App Download

  • அப்பாய்ண்ட்மெண்ட் நாளில் உங்களிடம் ஒரு படிவம் கொடுக்கப்படும். அதை பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பிறகு அதிகாரி பயோமெட்ரிக் விவரங்களை சேவை மைய அதிகாரி சரிபார்ப்பார். பிறகு நேரடியாக அதிகாரி உங்களை புகைப்படம் எடுப்பார்.
  • இந்த சேவைக்கு நீங்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த 90 நாட்களுக்குள் ஆதாரில் உங்கள் போட்டோ மாற்றப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here