அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ரேஷன் கார்டில் உங்களின் மொபைல் எண் சரியாக இருப்பது அவசியமாகும். தற்போது ஆன்லைன் மூலமாக உங்கள் ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றலாம்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் உள்ளிட்ட பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்ற 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. இவை குடும்பத் தலைவரின் வருமானத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு முதல் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வெளிமாநில தொழிலாளர்களும் பயன்பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் புழக்கத்திற்கு வரும் புதிய 500 ரூபாய் நோட்டுகள்? RBI அதிரடி நடவடிக்கை!
தற்போது ரேஷன் கார்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமில்லை முக்கிய இருப்பிட சான்றாகவும் விளங்குகிறது. இத்தகைய ஆவணத்தை நாம் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். முன்பெல்லாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருக்கும் தற்போது ஆன்லைன் மூலம் எளிதாக ரேஷன் கார்டில் விவரங்கள் மாற்றலாம். ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை பதிவு செய்தால் மட்டுமே மாத மாதம் வாங்கும் ரேஷன் பொருட்கள் பெறும் குறுஞ்செய்தியை நாம் பெற முடியும்.
Exams Daily Mobile App Download
ஒவ்வொரு தாலுக்கா அலுவலகத்திலும், தனியாக ரேஷன் கார்டு தொடர்பான உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்றும் செல்பேசி எண்ணை மாற்றிக்கொள்ளலாம். மேலும் 1967 என்ற உதவி எண்ணை அழைத்து மொபைல் எண்ணை மாற்றுவது தொடர்பான சந்தேகங்களை கேட்டறியலாம். மொபைல் எண் மாற்ற ஆதார் எண் மற்றும், குடும்ப அட்டையின் நகல் அவசியமாகும். அதிகாரியிடம், மொபைல் எண் மாற்றுவதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து புதிய எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.