PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மாற்றம் செய்வது எப்படி?

0
PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மாற்றம் செய்வது எப்படி?
PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மாற்றம் செய்வது எப்படி?
PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மாற்றம் செய்வது எப்படி?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி போன்றவற்றை முறையாக பதிவு செய்வது மற்றும் அதில் உள்ள மாற்றங்களை எவ்வாறு செய்வது என்று முறையாக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

PF கணக்கு மாற்றங்கள்:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சரியான மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை தான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது மிக முக்கியம். பல செயல்முறைகளுக்கும் இந்த விவரங்கள் அவசியம். உறுப்பினர் சேவா போர்ட்டலில் இந்த செயல்முறைகளை ஆன்லைனில் முடிக்க பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP அனுப்பப்படுகிறது. இதேபோல், சரியான மின்னஞ்சல் ஐடி EPFO மையத்தில் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பேருந்து பயணம் – அறிவிப்பு வெளியீடு!

EPFO அறிக்கையின் படி, பயனர்களின் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள சுயவிவரத்தில் உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்க வேண்டும் என்றும், அது தவறாக இருக்கும் பட்சத்தில் உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, உங்களின் சொந்த மொபைல் எண்ணை புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறது. இ-நாமினேஷன் மற்றும் க்ளைம்களை தாக்கல் செய்ய மொபைல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை முறையாக எவ்வாறு செய்வது என்று கீழே வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

EPF கணக்கில் மொபைல் எண் மற்றும்/அல்லது மின்னஞ்சல் ஐடி புதுப்பிக்கும் வழிமுறைகள்:
  • உறுப்பினர் சேவா போர்ட்டலில் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.
  • அதில், ‘Manage’ பிரிவில் ‘Contact Details’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதில், தற்போது புதுப்பிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி உங்கள் திரையில் வரும். மொபைல் எண்ணின் முதல் மற்றும் கடைசி இரண்டு இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடியின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை மட்டும் காட்டும். மற்றவை மறைக்கப்படும்.
  • புதுப்பிக்க விரும்பும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க, மொபைல் எண் மற்றும்/அல்லது மின்னஞ்சல் ஐடி. தேர்ந்தெடுக்கப்பட்டதும், உங்கள் புதிய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.
  • புதிய விவரங்கள் உள்ளிடப்பட்டதும், ‘Get Authorization Pin’ என்பதைக் கிளிக் செய்யா வேண்டும். பிறகு புதிய மொபைல் எண் மற்றும்/அல்லது மின்னஞ்சல் ஐடிக்கு 4 இலக்க பின் அனுப்பப்படும்.
  • அதை உள்ளிட்டதும் ‘மாற்றங்களைச் சேமி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, மாற்றங்கள் உங்கள் EPF கணக்கில் சேமிக்கப்படும்.
  • மொபைல் எண்ணை பதிவு செய்யும் வழிகள்:
  • உறுப்பினர் சேவா போர்ட்டலுக்குச் சென்று ‘UAN ஐச் செயல்படுத்து’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • UAN, ஆதார் எண், பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட்ட வேண்டும். இவை EPFO பதிவில் இருந்ததை போலவே இருக்க வேண்டும். UIDAI பதிவுகளின்படி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • இனி கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். UAN ஐ செயல்படுத்துவதற்கு ஆதாருடன் கிடைக்கும் விவரங்களைப் பகிர்வதற்கு சம்மதிக்க வேண்டும்.
  • ‘Get Authorization Pin’ என்பதைக் கிளிக் செய்த பின்னர், உங்கள் மொபைல் எண்ணுக்கு 4 இலக்க OTP அனுப்பப்படும்.
  • உங்கள் UAN செயல்படுத்தப்பட்டதும், உறுப்பினர் சேவா போர்ட்டலில் உங்கள் EPF கணக்கிற்கு கடவுச்சொல் அனுப்பப்படும், உங்கள் மொபைல் எண் அனுப்பப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!