PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் EPF கணக்கை மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!

0
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் EPF கணக்கை மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் EPF கணக்கை மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!

வருங்கால வைப்பு நிதி (PF) அமைப்பு உறுப்பினர்கள் இப்போது ஊழியர்களின் PF கணக்குகளை ஆன்லைனில் மாற்றலாம் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தெரிவித்துள்ளது. இதற்கான எளிய வழிகாட்டுதல்களை விரிவாக காணலாம்.

PF கணக்கு

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்பது இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பாகும். இது இந்தியாவில் வருங்கால வைப்பு நிதிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிக்கும் பொறுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்த EPFO அமைப்பு மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு கட்டாய வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கிறது. அதே நேரத்தில் EPFO அமைப்பு தனது சந்தாதாரர்களுக்கு பல்வேறு சேவைகளையும், சலுகைகளையும் அளிக்கிறது.

TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2022 – இன்றே கடைசி நாள்!

இப்போது வருங்கால வைப்பு நிதி (PF) அமைப்பின் உறுப்பினர்கள், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை ஆன்லைனில் மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எளிய வழிகாட்டுதல்களை விரிவாக காணலாம். இதற்காக EPFO பயனர்கள், அனைத்து PF கணக்குகளையும் ஒரே உலகளாவிய கணக்கு எண்ணின் (UAN) கீழ் இணைப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு ஊழியர் அலுவலகம் அல்லது நிறுவனத்தை மாற்றும்போது EPF பரிமாற்றம் தேவைப்படுகிறது. இந்த செயல்முறைகள் தற்போது ஆன்லைன் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக

  • முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • இதில் UAN மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைய வேண்டும்.
  • அங்கு ஆன்லைன் சேவைகள் என்பதற்கு சென்று ‘ஒரு உறுப்பினர் – ஒரு EPF கணக்கு (பரிமாற்றக் கோரிக்கை)’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து தற்போதைய வேலைக்கான ‘தனிப்பட்ட தகவல்’ மற்றும் ‘PF கணக்கு’ ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
  • இப்போது ‘விவரங்களைப் பெறு’ என்பதை கிளிக் செய்யவும்.
  • இதில் முந்தைய வேலையின் PF கணக்கு விவரங்கள் தோன்றும்.
  • அதில், சான்றளிக்கும் படிவத்திற்கு உங்கள் முந்தைய நிறுவனம் அல்லது தற்போதைய நிறுவனத்தை தேர்வு செய்யவும்.
  • UAN பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெற, ‘OTP பெறுக’ என்பதை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து ‘OTP’ ஐ உள்ளிட்டு ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!