ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்திய குடிமகனாக உள்ள ஒவ்வொருவருக்கும் முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதாரில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம். இத்தகைய வசதியை மக்கள் நலன் கருதி அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஆதாரில் மாற்றம்:

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரு முக்கிய அடையாள அட்டையாக ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையானது மத்திய, மாநில அரசு செயல்பாடுகள் மற்றும் அரசு சாரா தனியார் அமைப்பு செயல்பாடுகள் என அனைத்திற்கும் முக்கிய ஆவணமாக கருதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ள விபரங்கள் அனைத்தும் மிகச்சரியாக இருத்தல் அவசியமாகும். தவறாக விபரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாகவோ அல்லது இ – சேவை மையம் மூலமாகவோ மாற்றம் செய்து கொள்ளலாம்.

டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!

இந்த வசதிகளை மக்களின் நலன் கருதி அரசு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆதாரில் பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், போட்டோ உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் வீட்டிலிருந்தே மாற்றம் செய்து கொள்ள முடியும். ஆனால் போட்டோ மற்றும் மொபைல் எண் ஆகிய விபரங்கள் ஆதார் சேவை மையத்திற்கு நேரில் சென்று மட்டும் தான் மாற்றம் செய்ய முடியும். இதர விபரங்கள் மாற்ற பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருந்தால் நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் மாற்றம் செய்யலாம். அவ்வாறு மேற்கொள்ளும் மாற்றங்களில் சில விதிமுறைகள் உள்ளன.

அதாவது ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பிறந்த தேதியை ஒரு முறைக்கு மேல் அப்டேட் செய்ய முடியாது. அதேபோல ஆதார் அட்டையில் உள்ள ஒருவரின் பெயரை இரண்டு முறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும். அதனை தொடர்ந்து உங்கள் பாலினத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். அந்த வகையில் ஆதாரில் பிறந்த தேதியை வீட்டிலிருந்தே மாற்றம் செய்வதற்கான எளிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

ஆதாரில் பிறந்த தேதியை மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்:

1. முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற ஆதார் சேவையின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. பின்னர் தோன்றும் பக்கத்தில் Proceed to Update Aadhaar என்ற மெனுவை க்ளிக் செய்து அதில் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண் மற்றும் Captcha குறியீடு கொடுக்க வேண்டும். பின்னர் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.

3. அதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் Update Demographics Data என்பதை தேர்வு செய்து மீண்டும் OTP சரிபார்ப்பு செய்யப்படும். அதன்பின் பிறந்த தேதியை மாற்றம் செய்து அதற்கான ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!