EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – PF இருப்பு தொகையை தெரிந்து கொள்வது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - PF இருப்பு தொகையை தெரிந்து கொள்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - PF இருப்பு தொகையை தெரிந்து கொள்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – PF இருப்பு தொகையை தெரிந்து கொள்வது எப்படி?

EPFO நிதி திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்கள் கண்டிப்பாக PF இருப்பு தொகையை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது EPFO ன் இணையதள முகவரி, பாஸ் புக், குறுஞ்செய்தி மூலமாக எப்படி PF இருப்பு தொகையை அறிந்துகொள்ளலாம் என்பதற்கான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PF இருப்பு தொகை:

EPFO என்னும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் இந்த திட்டத்தின் மூலமாக வருமானத்தை ஈட்டி கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து ஒரு சிறிய தொகை அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன் பெற்று வருகிறார்கள். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.

தீவிரமடையும் கொரோனா பரவல் – ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு! பீதியில் மக்கள்!

EPFO கணக்கில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்கள் அவ்வப்போது கணக்கில் எவ்வளவு PF இருப்புத்தொகை இருக்கிறது என்பதை சரிபார்த்து கொள்ளவேண்டும். பிஎஃப் இருப்பு தொகையை EPFO ன் இணையதள முகவரி, பாஸ் புக், குறுஞ்செய்தி மூலமாக கணக்கிட்டு கொள்ளலாம். EPFO ன் இணையதள முகவரியான www.epfindia.gov.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று Our Services ஆகிய பகுதிக்கு கீழ் உள்ள For Employees பகுதியை கிளிக் செய்து பிஎஃப் இருப்பு தொகையை அறிந்துகொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

பாஸ்புக் மூலமாக பிஎஃப் இருப்பு தொகையை அறிந்துகொள்ள Member Passbook என்கிற பகுதியை கிளிக் செய்து UAN எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து அறிந்துகொள்ளலாம். UAN எண் இல்லையென்றால் epfoservices.in/epfo/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று உங்களது மாநிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு, PF கணக்கு எண், பெயர் மற்றும் மொபைல் நம்பரை பதிவு செய்து PF இருப்பு தொகையை அறிந்துகொள்ளலாம். 7738299899 என்கிற எண்ணுக்கு “EPFOHO UAN ENG” என்று குறுந்செய்தி அனுப்பியும் PF இருப்பு தொகையை அறிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!